• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னையில் காரைக்குடியை கொண்டு வந்த கலர்ஸ் தமிழ்!

சென்னையில் காரைக்குடியை கொண்டு வந்த கலர்ஸ் தமிழ்!

எங்க வீட்டு மீனாட்சி

எங்க வீட்டு மீனாட்சி

நடிகர் ஜீவா, கேரள நடிகையான ஸ்ரீரிதா சிவதாஸ் ஆகியோரோடு நடிகை பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்துள்ள இந்த நெடுந்தொடர் அக்டோபர் 18-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது.

  • Share this:
    தொலைக்காட்சி நெடுந்தொடருக்காக பிரம்மாண்ட செட் அமைத்து பலரையும் கலர்ஸ் தொலைக்காட்சி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    காரைக்குடி பகுதிகளில் உள்ளது போலவே பெரிய வீடு, நடுவே முற்றம், மர படிகட்டுகள் பிரம்மாண்ட ஊஞ்சல், என சென்னை நகருக்குள் காரைக்குடியை கண்முன் நிறுத்துகிறது கலர்ஸ் தொலைக்காட்சியின் புதிய நெடுந் தொடரான எங்க வீட்டு மீனாட்சிக்காக அமைத்துள்ள பிரம்மாண்ட அரங்கு.

    நடிகர் ஜீவா, கேரள நடிகையான ஸ்ரீரிதா சிவதாஸ் ஆகியோரோடு நடிகை பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்துள்ள இந்த நெடுந்தொடர் அக்டோபர் 18-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது. கல்லூரி விரிவுரையாளருக்கும், சமையல் கலைஞருக்கும் இடையே நடைபெறும் காதலை மையப்படுத்தி உருவாகிறது இந்தத் தொடர். இதற்காக சென்னை சிட்லபாக்கத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் பேசிய நடிகர் ஜீவா இந்த கதாபாத்திரம் தன்னை பல வீடுகளுக்குள்ளும் அழைத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    Enga Veetu Meenakshi serial in Colors Tamil, Colors tamil, enga veettu meenakshi serial, enga veettu meenakshi, colors tamil enga veettu meenakshi serial, colors tamil serial, கலர்ஸ் தமிழ், எங்க வீட்டு மீனாட்சி சீரியல், கலர்ஸ் தமிழ் எங்க வீட்டு மீனாட்சி சீரியல், தமிழ் சீரியல் செய்திகள், சீரியல் செய்திகள் தமிழ், tamil serial news, serial news tamil
    எங்க வீட்டு மீனாட்சி


    எங்க வீட்டு மீனாட்சி மட்டுமல்லாது புதிய பல தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் கலர்ஸ் தொலைக்காட்சி துவங்கியுள்ளது. இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கலர்ஸ் தொலைக்காட்சியை அதிகம் ரசிக்கும் ஒரு தொலைக்காட்சி ஆக மாற்றும் என நம்பப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: