தீபாவளி அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.
கோல்ட் வின்னர், எல்டியா தூய தேங்காய் எண்ணை, தங்கமயில் ஜூவல்லரி–ராம்ராஜ் பட்டு வேட்டிகள், பட்டுச் சட்டைகள் மற்றும் ஐஸ்வர்யா பெர்ட்டிலிட்டி சென்டர் ஆகிய ஸ்பெஷல் பார்ட்னர்கள் மற்றும் (Special Partner) அசோசியேட் ஸ்பான்சர் (Associate Sponsor) பாரத் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் அப்ளையன்சஸ் ஆகியோரின் ஆதரவுடன், தீபாவளி திருநாள் அன்று உற்சாகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.
இந்த மங்களகரமான தீபாவளிப் பயணத்தை தொடங்கும் வண்ணம், கலர்ஸ் தமிழின் பிரபலமான நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான புதிரான கதைக்களங்களுடன் அலங்கரிக்க உள்ளன. பரபரப்பான திருமணக் காட்சியுடன் ‘அம்மன் 2’ தொடர் தொடங்குகிறது. ஈஸ்வர் யாரை திருமணம் செய்வார்? சக்தியா அல்லது துர்காவா? நவம்பர் 4, 2021 அன்று மாலை 6 மணிக்கு இதைக் காண தவறாதீர்கள்.
உற்சாகத்தை ஒரு படி உயர்த்தும் வகையில் அபி மற்றும் அசோக் பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் ‘அபி டெய்லர்’ தொடரில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நடிகை தீபா ஷங்கர் தீபாவளியை கொண்டாடும் வகையில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சில்லுனு ஒரு காதல்’, தொடரில் கருத்தம்மா ராஜஸ்ரீயின் இனிமையான சிறப்பு தோற்றம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும்.
அதோடு நின்றுவிடாமல், பார்வையாளர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் சேனலின் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளான ‘எங்க வீட்டு மீனாட்சி’ தொடர் இரவு 7 மணிக்கும், ‘இதயத்தை திருடாதே 2’ தொடர் இரவு 8 மணிக்குக்கும் பார்வையாளர்களின் பண்டிகை கொண்டாட்டமாக வருகிறது.
இது மட்டும் இன்றி, விம் வழங்கும் கலர்ஸ் தமிழின் முதன்மையான டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை ஓரியோ மற்றும் நிப்பான் பெயின்ட் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் ஒளிபரப்ப உள்ளது. இந்த வார இறுதியில் இரவு 7.30 மணிக்கு கோலிவுட் நட்சத்திரங்களை கொண்டாடும் வகையில் இந்நகழ்ச்சி அமையவுள்ளது. நவம்பர் 1–ம் தேதி மதியம் 1:30 மணி முதல் உத்தரவு மகாராஜா, மீண்டும் ஒரு மரியாதை, சேஸிங், மகாமுனி மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற ஆர்வமூட்டும் திரைப்படங்களையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் இந்த திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

தீபாவளி படங்கள்
மேலும், தீபாவளி அன்று காலை 6:30 மணிக்கு புகழ்பெற்ற பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் யேசுதாஸ் பாடிய வாய்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் (Voice of Legends) நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இளையராஜா 75 நிகழ்ச்சியும், காலை 9.30 மணிக்கு இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் மற்றும் மதியம் 12.30 மணிக்கு மெட்ராஸின் மொசார்ட் (Madras Mozart) ஏஆர் ரஹ்மான் இடம்பெறும் ‘நெஞ்சே எழு’ ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

தீபாவளி நிகழ்ச்சிகள்
இது குறித்து
கலர்ஸ் தமிழ் வர்த்தகத் தலைவர் ராஜாராமன் பேசுகையில், “இந்த கலர்கட்டும் தீபாவளிக்கு, எல்லையற்ற பொழுதுபோக்கு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அற்புதமான
நிகழ்ச்சிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சேனலில் மிகவும் விரும்பப்படும் சில குடும்ப பெயர்களையும் நாங்கள் கொண்டு வருகிறோம்.
தமிழகம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த தீபாவளி நிகழ்ச்சிகள் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.