• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுவாரஸ்யத்தை கூட்டும் கலர்ஸ் தமிழின் டான்ஸ் Vs டான்ஸ்!

சுவாரஸ்யத்தை கூட்டும் கலர்ஸ் தமிழின் டான்ஸ் Vs டான்ஸ்!

டான்ஸ் vs டான்ஸ்

டான்ஸ் vs டான்ஸ்

வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் அனிமேஷன், துள்ளல் நடனம், பங்க் டான்ஸ், பிரேக் டான்ஸ், கிளாசிக்கல் டான்ஸ், லத்தீன் சல்சா, ஆப்ரோ டான்ஸ் மற்றும் லிரிகல் டான்ஸ் போன்ற பல்வேறு நடனங்கள் இடம்பெற உள்ளன.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 32 போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதில் போட்டியாளர்கள் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் தங்களை தயார்படுத்தி உள்ளனர். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

    நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா ஆகியோரின் அற்புதமான வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அவர்கள் போட்டியாளர்கள் மற்றும் அந்தந்த அணி உரிமையாளர்களை சந்தித்து பேசினர். அதில் நடிகர் ஷாம், நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை அபிராமி மற்றும் நடிகை இனியா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் பல சிறப்பம்சங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் அனிமேஷன், துள்ளல் நடனம், பங்க் டான்ஸ், பிரேக் டான்ஸ், கிளாசிக்கல் டான்ஸ், லத்தீன் சல்சா, ஆப்ரோ டான்ஸ் மற்றும் லிரிகல் டான்ஸ் போன்ற பல்வேறு நடனங்கள் இடம்பெற உள்ளன.

    1. வினோஷ் ஆனந்த் மற்றும் சையத் கபீர்
    2. சாண்டி சுந்தர் மற்றும் நந்திகா
    3. செராபின் மற்றும் சிவன்
    4. நாவலரசன் மற்றும் அலிஷா
    5. சாய் மற்றும் அரவிந்த்
    6. ஜாக்கி மற்றும் பிருத்விராஜ்
    7. மெர்சினா மற்றும் ராய்சன்
    8. ஹரி மற்றும் பிரியதர்ஷினி
    9. காவ்யா மற்றும் மகாலட்சுமி
    10. பிளாக் மற்றும் கார்த்திக்
    11. அனுஷா மற்றும் சுபாங்கி
    12. ஜூட் மற்றும் ரக்ஷனா
    13. அஞ்சனா மற்றும் அபிராஜ்
    14. அபிராமி மற்றும் மாதுரி
    15. மனோஜ் மற்றும் அமிர்தா
    16. அல்கெனா மற்றும் ஆயிஷு

    Colors Tamil TV dance vs dance, Colors Tamil TV dance vs dance, dance vs dance show, colors tamil, colors tamil tv, colors tamil shows, dance vs dance colors tamil, கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ் டான்ஸ் vs டான்ஸ், கலர்ஸ் தமிழ் கலர்ஸ் டான்ஸ் vs டான்ஸ், டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி

    ஆகிய குழுக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பேச்சாளர் ஞானசம்பந்தமும் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழ் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை விரிவாக எடுத்துரைக்க உள்ளார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒவ்வொரு நடனத்தின் வரலாற்று பின்னணியையும் பாரம்பரியத்தையும் பார்வையாளர்களுக்கு தொகுத்து வழங்க இருக்கிறார்.

    Colors Tamil TV dance vs dance, Colors Tamil TV dance vs dance, dance vs dance show, colors tamil, colors tamil tv, colors tamil shows, dance vs dance colors tamil, கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ் டான்ஸ் vs டான்ஸ், கலர்ஸ் தமிழ் கலர்ஸ் டான்ஸ் vs டான்ஸ், டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி
    டான்ஸ் vs டான்ஸ்

    மேலும், வரவிருக்கும் நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கப்போகிறார். அது அவர்களை நிச்சயம் வாயடைக்கச் செய்யும். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: