Home /News /entertainment /

கலர்ஸ் தமிழின் ’மந்திர புன்னகை’.. எதிர்பார்ப்பை கூட்டும் புரமோ !

கலர்ஸ் தமிழின் ’மந்திர புன்னகை’.. எதிர்பார்ப்பை கூட்டும் புரமோ !

மந்திர புன்னகை

மந்திர புன்னகை

பல திருப்பங்களுடன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைக்கப்போகும் மந்திர புன்னகை தொடர்.

    கலர்ஸ் தமிழின் புதிய குறுந்தொடரான ’மந்திர புன்னகை’ இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

    எதிர்பார்ப்பை கூட்டும் இந்த மந்திர புன்னகை தொடரின்  புரமோ,  தனித்துவமான சித்தரிப்பின் மூலம் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் காயத்ரி (நடிகை மெர்ஷீனா நீனு நடிப்பில்), கதிர் (நடிகர் ஹுசைன் அகமது கான் நடிப்பில்) மற்றும் குரு விக்ரம் (நடிகர் நியாஸ் கான் நடிப்பில்) ஆகியோர் இடம்பெறுகின்றனர். இந்த மூவரின் வாழ்க்கையும் ஒரு பாதையில் குறுக்கிடுகின்றன. அதன்பிறகு எதிர்பாராத தொடர் நிகழ்வுகளில் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

    பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறாங்களாம்.. வெண்பா கொடுத்த அதிர்ச்சி!

    ஒருவரின் வாழ்க்கையில் ஆனந்தமான நாள் எதிர்பாராத பயங்கரங்கள் நிறைந்த தினமாக மாறினால் என்ன செய்வது? ஒரு கனவு போன்ற திருமண சடங்குகளின் தொகுப்பை நேர்த்தியாக காட்டுகிறது புரமோ . இதில் திருமண மேடையில் கதாநாயகி காயத்ரி, கதிர் என்ற இளைஞனை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறாள், ஆனால் தனது கழுத்தில் குரு விக்ரம் தாலி கட்டுவதைப் பார்க்கும்போது அவளது அழகான கனவு சுக்குநூறாக உடைந்துபோகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    கதிர் அவளைக் கைவிட்டுவிடும் அளவுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு சாத்தியமான காரணம் என்னவாக இருக்கும்? இது அவளது கற்பனையா அல்லது காயத்திரியின் கனவு எதார்த்தத்தில் ஒரு எதிர்பாராத நிகழ்வாக உண்மையிலேயே மாறியிருக்கிறதா?

    ஹோட்டலில் வேலை செய்யும் கதிர்.. அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் முல்லை!

    பல திருப்பங்களுடன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைக்கப்போகும் மந்திர புன்னகை தொடர்., ஆகஸ்ட் 1, திங்கட்கிழமை இரவு 9:30 மணி முதல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பை தொடங்கி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television, TV Serial

    அடுத்த செய்தி