Home /News /entertainment /

கலர்ஸ் தொலைக்காட்சியில் புதிய தொடர்.. வள்ளி திருமணம்! லீட் ரோலில் நடிப்பவர் யார் தெரியுமா?

கலர்ஸ் தொலைக்காட்சியில் புதிய தொடர்.. வள்ளி திருமணம்! லீட் ரோலில் நடிப்பவர் யார் தெரியுமா?

வள்ளி திருமணம்

வள்ளி திருமணம்

அழகும், அதே நேரத்தில் அறிவும் நிறைந்த தேனி மாவட்டத்து சாயலில் அசல் கிராமத்துப் பெண் வள்ளியாக நடிகை நட்சத்திரா இடம்பெறுகிறார்.

    புத்துணர்வூட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருக்கும் கலர்ஸ் தமிழ், அதன் புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியான வள்ளி திருமணம் ஜனவரி 3, இரவு 8.00 மணிக்கு அதன் முதல் ஒளிபரப்பு தொடங்குவதை அறிவித்திருக்கிறது. பாரம்பரிய கலை வடிவமான பொம்மலாட்டத்தின் மூலம் சித்தரிக்கப்பட்ட இந்த நெடுந்தொடரின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அழகும், அதே நேரத்தில் அறிவும் நிறைந்த தேனி மாவட்டத்து சாயலில் அசல் கிராமத்துப் பெண் வள்ளியாக நடிகை நட்சத்திரா இடம்பெறுகிறார் என்ற ஆர்வமூட்டும் ஒரு திருப்பத்தை இந்த புரோமோ முன்வைக்கிறது. அத்துடன், இனி நிகழப்போவது என்னவென்று அறிய பார்வையாளர்களின் வியப்பையும், கற்பனையையும் தூண்டிவிடுகிறது.

    வள்ளி திருமணத்தின் புதிய ப்ரோமோ வை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.



    பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப வள்ளித்திருமணம் நெடுந்தொடரை ஜனவரி 2 ஆம் தேதி முதல் VOOT – இல் பிரத்தியேகமாக கண்டு ரசிக்கலாம் பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி