பின்னணி பாடகர்கள் கலந்துக் கொள்ளும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்!

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

இந்த வார சன்டே கொண்டாட்டம் பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 • Share this:
  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் கலந்துக் கொள்கிறார்கள். இது மே 30-ம் தேதி அதாவது, நாளை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  இந்த வாரம் இசை மேளாவாக ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான கிரேஸ் கருணாஸ், வேல்முருகன், கானா பாலா, ஷர்மிளா மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் பங்கேற்று இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்ட இருக்கிறார்கள். அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடல்களும் பார்வையாளர்களின் மனதிற்கு இதமான பாடல்களாக அமைவதோடு அவர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்வது உறுதி.

  பரத் மற்றும் சஸ்டிகா ஆகியோர் தொகுத்து வழங்கும் இவ்வார எபிசோடில் ஜொனர் ஸ்வாப் போன்ற சிறப்பு போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இதில் பங்கேற்கும் பாடகர்கள் நாட்டுப்புற பாடல்கள் முதல் மெல்லிசை பாடல்கள் வரை விதவிதமான பாடல்களை வெவ்வேறு வகைகளில் பாட இருக்கிறார்கள். இந்த வார சன்டே கொண்டாட்டம் பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல பின்னணி பாடகர்கள் தங்கள் இசை பயணத்தை பற்றியும், தாங்கள் இந்த இடத்தை அடைய அவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொள்வதோடு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில மகிழ்ச்சியான சம்பவங்களையும் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் இந்த இசை மேளாவில், பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை கவுரவிக்கும் விதமாக அவர் பாடிய பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

  இதைக் கண்டுகளிக்க நாளை மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்கட்சியை டியூன் செய்யுங்கள். ‘சன்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: