Colors Tamil: இன்று முதல் கலர்ஸ் தமிழின் ’கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’

Colors Tamil: இன்று முதல் கலர்ஸ் தமிழின் ’கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

முதல் எபிசோடில், இதயத்தை திருடாதே மற்றும் உயிரே ஆகிய நெடுந்தொடர்களின் ஒட்டுமொத்த குழுவினரும் பங்கேற்று, மோதவிருக்கின்றனர்.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 28-ம் தேதியான இன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.

    கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (சிஎஸ்கே) என்ற பெயரில் புத்தம் புதிய சிறப்பு நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும். இதில் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகள் மற்றும், நெடுந்தொடர்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் குழுக்கள் கலந்துக் கொள்கிறார்கள்

    விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோரால் சுவைபட தொகுத்து வழங்கப்படும் சிஎஸ்கே நிகழ்ச்சியில், கலர்ஸ் தமிழின் புதின நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களின் குழுக்களுக்கிடையே நட்புறவான மோதலையும், தோழமையான போட்டியையும் காணலாம். பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் இந்நிகழ்வில் இதுவரை வெளிப்படாத தங்களது திறமைகளை பலரும் அறியுமாறு காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளத்தையும் இந்நிகழ்ச்சி வழங்கும்.

    பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத சிஎஸ்கே நிகழ்ச்சியானது, நடனம், இசை ஆகியவற்றோடு குதூகலமும், கேளிக்கையும் நிறைந்த ஒன்றாக இருக்கும். இன்றைய முதல் எபிசோடில், இதயத்தை திருடாதே மற்றும் உயிரே ஆகிய நெடுந்தொடர்களின் ஒட்டுமொத்த குழுவினரும் பங்கேற்று, மோதவிருக்கின்றனர்.

    இந்த புதிய நிகழ்ச்சியின் தொடக்கம் குறித்து கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன், ”நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு நட்சத்திரங்களே காரணமாக இருக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிரோட்டமுள்ளதாக மாற்றுவதற்கு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த நட்சத்திரங்களின் சின்னத்திரை மற்றும் நிஜவாழ்க்கை திறன்களை அங்கீகரிக்கின்ற ஒரு பொருத்தமான கொண்டாட்டமான சிஎஸ்கே நிகழ்ச்சி இருக்கும்” என்றார்.

    கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடிஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: