Bhajan Samraat: கலர்ஸ் தமிழின் பஜன் சாம்ராட் தெய்வீக வாரம்!

கலர்ஸ் தமிழ் பஜன் சாம்ராட்

தமிழ் பஜனை பாடல்களை பாடி கொண்டாடுவது இந்த வார நிகழ்வுகளில் சிறப்பம்சமாக இருக்கும்.

  • Share this:
    பஜன் சாம்ராட் எனும் ரியால்டி நிகழ்ச்சியின் வழியாக தெய்வீக சுவையை வார நாட்களில் வழங்குகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

    2021 பிப்ரவரி 22 திங்கள் முதல், 24 புதன்கிழமை வரை தெய்வீக சுவையூட்டும் பஜனை பாடல்களை கேட்டு பயனுற கலர்ஸ் தமிழ் அலைவரிசையை தவறாது டியூன் செய்யுங்கள்.

    மிக நுட்பமான பஜனை பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி திறனையும், இசை மேதைமையையும் பிற போட்டியாளர்களைவிட சிறப்பாக வெளிப்படுத்துவதன் மூலம் இந்த வார எபிசோடுகள் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புகழ்பெற்ற கர்நாடக சங்கீத விற்பன்னர்களான டாக்டர் ஆர்.கணேஷ் மற்றும் மஹதி இந்த நிகழ்வில் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகின்றனர்.

    இப்போட்டியில் தற்போது 10 குழுக்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் பஜனை பாடல்களை சுவைபட வழங்குவது, அவற்றிற்கான நுட்பங்களும் ஒத்திகளும் உச்சத்தை எட்டுமாறு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பிரத்யேக சுற்றில் பிரபல கவிஞரான கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்ட தமிழ் பஜனை பாடல்களை பாடி கொண்டாடுவது இந்த வார நிகழ்வுகளில் சிறப்பம்சமாக இருக்கும்.

    பஜன் சாம்ராட் போட்டியில் வெற்றிவாகை சூடுவதற்காக மற்றவர்களுக்கு எதிராக ஒவ்வொரு குழுவும், தங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் என்பதால், இந்த வாரம் ஒளிபரப்பாகிற எபிசோடுகள் ஒரு புதிய தெய்வீக உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். தங்களது தனிப்பட்ட உத்தியோடு ஒவ்வொரு குழுவாலும் வழங்கப்படுகிற பாடல்களும், இசையும் இந்நிகழ்ச்சியின் சுவையையும், தரத்தையும் மிகவும் உயர்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.

    தங்களுக்கு நன்கு பரிச்சயமான இடத்தையும் கடந்து தங்களது திறன்களை இன்னும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி நடுவர்களை தன்வசப்படுத்துவதற்காக இக்குழுக்கள் மிக நுட்பமான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளையும் மற்றும் பிற தெலுங்கு பஜனை பாடல்களையும் பாடவிருக்கின்றனர்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டி.டி.ஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: