விஜய் டி.வி, ஜீ தமிழ், சன் டி.வி. என சீரியல் மற்றும் ஷோக்களை ஒளிபரப்பாகி வரும் பிரபல் டி.வி. சேனல்களுக்கு மத்தியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளது. இந்த சேனலில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ மற்றும் ‘அம்மன்’ ஆகிய தொடர்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
அதனால் தான் இந்த தொடர்களின் அடுத்தடுத்த பாகங்கள் ஒளிபரப்பாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ‘இதயத்தை திருடாதே சீசன் 2’ சீரியலைத் தொடர்ந்து ‘அம்மன்’ தொடரின் 3வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அம்மன் தொடரில் பவித்ரா கவுடா என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கதைக்களமும், துணைக் கதாபாத்திரங்களும் மாறினாலும், லீடு ரோலில் நடித்து வரும் பவித்ரா கவுடா மாறவே இல்லை. 2020ம் ஆண்டு முதலே இவர் தான் அம்மன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஈஸ்வராக அமல்ஜித், சாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிசங்கர் நாராயணன், மந்திரவாக சந்திரிகா, காந்தாரியாக சுப ரக்ஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தற்போது அம்மன் 3 சீரியலில் சக்தி மற்றும் ரத்னா அதன் நாகத்திற்கு பிரபலமான ஒரு கோவிலுக்கு வருகை தருகிறார்கள், மேலும் அந்த நாக கோயிலில் பிரார்த்தனை செய்பவர்களின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவதாக நம்பப்படுகிறது. அப்போது கோயில் இருக்கும் சித்தர் ஒருவர் சிறுமி ரத்னாவிற்கு வர உள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கிறார்.
இதற்கிடையில் ரத்னா, பார்வதி, சக்தி மூவருக்கும் இடையிலான ஒரு திடுக்கிடும் தொடர்பை கண்டுபிடிக்கும் தரகன் ரத்னாவை கொல்லும் படி ஆளை ஏவி விடுகிறார். நாக பூமியில் உள்ள புதையலை எடுக்க வேண்டும் என்றால், அப்போது பிறந்த குழந்தைகளை எல்லாம் கொல்ல வேண்டும். ஆனால் அம்மன் சக்தியுடன் பிறந்த குழந்தையான ரத்னா அவங்க கிட்ட இருந்து தப்பிச்சி தாயம்மாளிடம் வளர்கிறாள்.
also read : சரவெடியாய் வெளியானது 'பீஸ்ட்' ட்ரெய்லர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
மற்றொருபுறம் சக்தியும், ஈஸ்வரனும் குழந்தை ரத்னாவை சந்திக்கின்றனர். அங்கு தான் சக்திக்கு பின்னால் இருக்கும் மர்மம் தெரியவருகிறது. இந்நிலையில் ரத்னாவை கொல்ல இரண்டு பிளான்கள் போடப்பட்டுள்ளன. அதில் தரகன் வெற்றியடைவாரா? அல்லது சரியான நேரத்தில் சக்தி ரத்னாவை காப்பாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களைக் கவரக்கூடியதாக இருக்கும், இந்நிலையில் அவர்களது எதிர்பார்ப்பிற்கு எக்ஸ்ட்ரா விறுவிறுப்பு கூட்டும் வகையில் ‘அம்மன் 3’ சீரியலின் சிறப்பு எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை மேலும் என்டர்டெயின் செய்யும் விதமாக வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.