• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அதிரடி திருப்பங்களுடன் கலர்ஸ் தமிழின் அட்டகாச சீரியல்கள்!

அதிரடி திருப்பங்களுடன் கலர்ஸ் தமிழின் அட்டகாச சீரியல்கள்!

கலர்ஸ் தமிழ் சீரியல்

கலர்ஸ் தமிழ் சீரியல்

விறுவிறுப்புக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத இந்த அனைத்து நெடுந்தொடர் நிகழ்ச்சிகளையும் கலர்ஸ் தமிழில் கண்டு ரசியுங்கள்.

 • Share this:
  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, எதிர்பாராத புதிய புதிர்கள் மற்றும் அதிரடி திருப்பங்களோடு அதன் பிரபலமான நெடுந்தொடர்களின் மூலம் பார்வையாளர்களை முழுமையாக கைவசப்படுத்த இருக்கிறது.

  அம்மன் 2 (திங்கள் – சனி, மாலை 6 முதல் 7 மணி வரை) – இந்த வார எபிசோடு தொடர்ச்சியான பல அதிரடி திருப்பங்களை கொண்டதாக இருக்கிறது. ப்ரீத்தி ஸோடியாக் காஸ்மோவை சிறப்பு பார்ட்னராக கொண்டிருக்கும் அம்மன் 2 – ன் புத்தம் புதிய சீசன், இரட்டை கதாபாத்திரங்களில் ஈஸ்வரனை காட்டவிருக்கிறது. புனிதமான ருத்ரமாலையை கைப்பற்றுவதற்காக ஈஸ்வரனை சக்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சக்தியின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். எனினும், அவர்களுக்கிடையே ஒரு பிளவை உருவாக்குவதற்கு தீயசக்திகள் கைகோர்க்கின்றன மற்றும் சக்தியையும், ருத்ர மாலையையும் கவர்ந்திழுக்கின்றன. நாற்காலியின் முனைக்கே உங்களை நகர்த்திவிடும் இந்த பரபரப்பான நெடுந்தொடரைக் காண ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மறவாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

  எங்க வீட்டு மீனாட்சி (திங்கள் – வெள்ளி, இரவு 7 முதல் 8 மணி வரை) – மாமா மெய்யப்பனின் குடும்பம் மீனாட்சியின் சொந்த வீட்டிற்கு தங்க வருவதால் வீட்டை விட்டு வெளியர வேண்டிய நிர்பந்தத்தால், சிதம்பரத்தின் வீட்டிற்கு ஒரு வாரம் தங்குவதற்காக மீனாட்சி செல்கிறாள். சிதம்பரத்தின் அன்பு வலையில் மீனாட்சி விழுவாளா அல்லது மெய்யப்பனின் குடும்பத்துடனான சம்பந்தத்தில் என்ன நிகழப்போகிறது என்று அறிய திருப்பங்கள் நிறைந்த இத்தொடரைக் காண தவறாதீர்கள். தனது மகனுக்கு மீனாட்சியை திருமணம் செய்து வைக்க எந்த அளவிற்கு மெய்யப்பன் செல்கிறார் என்பதைக்காண திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

  Colors Tamil Serials

  Colors Tamil Serials

  இதயத்தை திருடாதே 2 (திங்கள் – வெள்ளி, இரவு 8 முதல் 9 மணி வரை) - ப்ரீத்தி ஸோடியாக் காஸ்மோவை சிறப்பு பார்ட்னராக கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே நெடுந்தொடரின் இனிவரவிருக்கும் எபிசோடுகளில் சிவாவின் அடையாளத்தை விசாரித்து கண்டறிய ஆதி திட்டமிடுகிறபோது, சிவாவின் உணர்வுகள் என்னவென்று சஹானா அறிய நேர்கிறது. சிவாவின் அடையாள மர்மத்தை உடைத்தெறிந்து உண்மையை கண்டறிவதில் ஆதிக்கு வெற்றி கிடைக்கிறதா என்று அறிய ஆவலா? தவறாமல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள்.

  Colors Tamil Serials

  அபி டெய்லர் (திங்கள் – சனிக்கிழமை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை) – அசோக்கின் ஆடையகத்தை மூடுவதற்காக அசோக்கை மைக்கேலும், டோனியும் கடத்தி, அசோக்கின் அம்மா நீலாம்பரியை மிரட்டுகிறார்கள். த்ரில்லிங்கான நிகழ்வுகளை அபி டெய்லரில் பார்வையாளர்கள் காணவிருக்கின்றனர். தன்னை கடத்தியவர்களிடமிருந்து விடுவித்து, தப்பிக்க அசோக்கால் முடிந்ததா அல்லது அசோக்கை காப்பாற்றி மீட்க அபி வருகிறாளா என்று அறிய திங்கள் – சனிக்கிழமை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, அசோசியேட் ஸ்பான்சர் A&M டிவிஸ்டி நூடுல்ஸ் வழங்கும் கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்.

  Colors Tamil Serials

  சில்லுனு ஒரு காதல் (திங்கள் – சனிக்கிழமை, இரவு 10:00 மணி முதல், 10:30 வரை) – அசோசியேட் ஸ்பான்சராக A&M டிவிஸ்டி நூடுல்ஸ் – ன் பங்கேற்போடு இனி வரவிருக்கும் எபிசோடுகள் சூர்யாவிற்கும், கயலுக்கும் இடையே உணர்ச்சிகளின் கொந்தளிப்பு சூறாவளியை காட்டவிருக்கின்றனர். காதல் அரும்புகிற போதிலும் கடந்த காலத்தில் இருந்த மோதல் உணர்வு அவர்களுக்கிடையே பிளவை உருவாக்குகிறது. அதுமட்டுமின்றி, சூர்யாவின் அம்மா அவனுக்கு திருமணம் செய்ய முனைகிறபோது சூர்யாவும், கயலும் ஒன்று சேர்வார்களா என்று பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும்.

  விறுவிறுப்புக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத இந்த அனைத்து நெடுந்தொடர் நிகழ்ச்சிகளையும் கலர்ஸ் தமிழில் கண்டு ரசியுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: