Abhi Tailor: கலர்ஸ் தமிழின் ‘அபி டெய்லர்’ ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

அபி டெய்லர் சீரியல்

2021 ஜுலை 19 திங்கள் அன்று ஆரம்பமாகின்ற அபி டெய்லர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க, ஒவ்வொரு திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள்.

  • Share this:
    தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, புதிய சீரியலான அபி டெய்லரின் ஒளிபரப்பு நாளை அறிவித்திருக்கிறது.

    பெண் தொழில்முனைவோர்களின் கதையையும், போராட்டங்களையும் உயிரோட்டமாக திரையில் காட்டுகிறது அபி டெய்லர் சீரியல். 2021 ஜுலை 19, திங்கள் முதல் ஆரம்பமாகின்ற இந்த புத்தம் புதிய நெடுந்தொடர், கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    ஒரு சிறு நகரத்தில் தையற்கலைஞராக (டெய்லர்) வாழ்க்கையை நடத்தும் துடிப்பான, இளம் பெண் அபிராமியின் (ரேஷ்மா முரளிதரனின் நடிப்பில்) கதையை சொல்கிறது அபி டெய்லர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை சுந்தரமூர்த்தி (பிரபல நடிகர் / காமெடியன் படவா கோபி நடிப்பில்) மற்றும் கூடப்பிறந்த தங்கை ஆனந்தி (நடிகை ஜெயஸ்ரீ) ஆகியோரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கொண்டிருக்கின்ற அபியின் வாழ்க்கை, அவளது சிறிய கடையை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணுமாறு செய்வது தான். ஒரு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான அசோக் (மதன் பாண்டியன் நடிப்பில்), ஒரு தொழிலகத்தை இந்நகரில் நிறுவி, செயல்படத் தொடங்கிய சில காலத்திற்குள்ளேயே அபியுடன் நேருக்கு நேர் மோதலில் ஈடுபடுகிறார். அபி மற்றும் அசோக் இருவருக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான மோதலும், காதலும் இக்கதைக்களத்தை அதிக ரசனைக்குரியதாக ஆக்குகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்புதிய தொடர் தொடங்கப்படுவது குறித்துப் பேசிய கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், “மனதை தொடுகின்ற நிகழ்வுகளோடு நிஜமான, யதார்த்தமான, அழுத்தம் திருத்தமான கதைகளை இவற்றின் மூலம் நாங்கள் உயிர்ப்புள்ளதாக எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம். எங்களது வாக்குறுதியைப் பின்பற்றும் வகையில், தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய அளவுகோல்களை நிறுவுகின்ற மற்றுமொரு அற்புதமான நெடுந்தொடர் புதினத்தை இப்போது நாங்கள் வழங்குகிறோம். அனைத்து வீடுகளிலும் பேசப்படும் பெயராக அபி உருவெடுப்பாள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். உலகமெங்கும் தமிழ் பேசும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை இந்நிகழ்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை,” என்று கூறினார்.

    2021 ஜுலை 19 திங்கள் அன்று ஆரம்பமாகின்ற அபி டெய்லர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க, ஒவ்வொரு திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: