கலர்ஸ் தமிழின் புதிய சீரியலில் இணைந்த ரியல் ஜோடி

மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் தொடரில் மதன் பாண்டியன், ரேஷ்மா முரளிதரன் இணைந்து நடிக்க உள்ளனர்.

  • Share this:
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே பூச்சூடவா. இத்தொடரில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ரேஷ்மா, மதன் பாண்டியன் இருவரும் 2021-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் தங்கள் காதல் திருமணத்தை உறுதி செய்தனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் இந்த ஜோடி அடுத்ததாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘அபி டெய்லர்’ தொடரில் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இத்தொடரின் ப்ரமோவில், ரேஷ்மா முரளிதரன், அபிராமி என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான தையற்கலை நிபுணராகவும் அவரது கடையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளின் தொகுப்பை வெறும் 30 நொடிகளில் மிக அழகாக வர்ணிப்பதும், சொல்லி முடித்து மூச்சு வாங்குவதற்காக நிற்கும்போது, 2021 மே 24-ம் தேதியிலிருந்து தொடங்கி இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் டிவியில் அபி டெய்லர், ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அபி டெய்லர் சீரியலில் மதன் பாண்டியன் - ரேஷ்மா முரளிதரன் இணைந்திருப்பதால் இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: