Colors Tamil: சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மோதும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்!

Colors Tamil: சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மோதும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்!

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ரியாலிட்டிஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), இந்த வாரம் படு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் அலைவரிசையின், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ரியாலிட்டிஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), இந்த வாரம் படு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிற எபிசோடில் நட்புறவோடு,போட்டித்திறனும் கலந்த மோதலில் திரைப்பட நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் மோதுகின்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சியை கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் ஒளிபரப்பவிருக்கிறது.

    விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் சிஎஸ்கே-வின் இந்த எபிசோடு பார்வையாளர்களை உற்சாகத்தின் உச்சிக்கே எடுத்துச் செல்லும் என்பது நிச்சயம். வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஒளிபரப்பாகும் சிஎஸ்கே-வின் இந்த எபிசோடில் அழகான நடனங்களும், அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகளின் சிறப்பான சங்கமமும் இடம்பெறுகிறது.

    உபாசனா ஆர்சி, ரிஷா ஜேக்கப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா, சாய்பிரியங்கா ரூத், ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா என மக்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் இடம்பெறும் இந்த எபிசோடு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒன்று சேர்த்துதரும் என்பது நிச்சயம்.

    குதூகலம் நிறைந்த பல்வேறு கேம்கள் மற்றும் சவால்கள் என இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய நிகழ்வுகள் இந்த ஷோவில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமின்றி, தங்களது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, கேளிக்கையான நிகழ்வுகளிலிருந்து ஆர்வமூட்டும் செய்திகளையும், துணுக்குகளையும் திரைப்பட நட்சத்திரங்களும், கலர்ஸ் தமிழ் நெடுந்தொடர்களின் நட்சத்திரங்களும் பகிர்ந்து கொள்வதனால் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும்.

    இந்த குதூகலமான அனுபவத்தை தவறவிடாமல் இருப்பதற்கு ஏப்ரல் 25-ம் தேதி ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க, கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறக்காதீர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: