• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Colors Tamil: சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்!

Colors Tamil: சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்!

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் தாங்கள் கடந்து வந்த பாதையில் சில மகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும், தங்களைப் பற்றி தெரியாத பல்வேறு விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

  • Share this:
    நடிகர் – நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிறைந்த ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சியை மே 23-ம் தேதி பார்த்து மகிழுங்கள்.

    ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’ என்னும் பொழுதுபோக்கு நிறைந்த ரியாலிட்டி ஷோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதில் இந்த வார இறுதியில் மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியையும் வழங்குகிறது. இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடர்களில் நடிக்கும் முக்கிய பிரபலங்கள் ஒன்றிணைந்து பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டியானது நடிகர் மற்றும் நடிகைகள் என இரண்டு குழுக்களுக்கு இடையே நடைபெற உள்ளது. எனவே இந்த வார கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சி பார்வையாளர்களை மிகுந்த உற்சாகப்படுத்தும்.

    பரத் மற்றும் சஸ்டிகா ஆகியோரால் இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட உள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடர்களில் நடிக்கும் முக்கிய பிரபலங்கள் 2 குழுக்களாக பிரிந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள். நடிகர் குழுவில் பார்வையாளர்களின் இதயம் கவர்ந்த அருண் பத்மநாபன், சமீர், அலெக்சாண்டர், விஷ்ணு மற்றும் மனோஜ் ஆகியோரும் நடிகைகள் குழுவில் தர்ஷினி கவுடா, சந்திரிகா, சுஜுவாசன், ஜெயஸ்ரீ மற்றும் தர்ஷினி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    இதில் பல்வேறு புதிர் விளையாட்டுகள் இடம்பெறுவதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் இடம்பெற உள்ளது. இது பார்வையாளர்களுக்கான ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. அதாவது, பலூன் விளையாட்டு, வழுக்கும் தளத்தில் நடக்கும் போட்டி, கைகளை பயன்படுத்தாமல் ஆப்பிள் சாப்பிடும் போட்டி மற்றும் தண்ணீர் பாட்டிலை சமநிலையில் வைத்து பேலன்ஸ் செய்து இலக்கை அடையும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற உள்ளன.

    அத்துடன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் தாங்கள் கடந்து வந்த பாதையில் சில மகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும், தங்களைப் பற்றி தெரியாத பல்வேறு விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    எனவே கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியை காண 23 மே, ஞாயிற்றுகிழமை அன்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். இந்நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.1808) தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: