Home /News /entertainment /

சீரியலில் நடிக்க வரும் அஜித் பட இயக்குனர்.. எந்த சேனலில் தெரியுமா?

சீரியலில் நடிக்க வரும் அஜித் பட இயக்குனர்.. எந்த சேனலில் தெரியுமா?

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

மந்திர புன்னகை தொடரில் டிடெக்டிவ் ரோலில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மந்திர புன்னகை’ தொடரில் என்ட்ரி கொடுக்கிறார் பிரபல இயக்குனர் சரவண சுப்பையா.

    திரைத்துறையில் இயக்குனர்கள் பலரும் நடிக்க வந்துவிட்டனர். வெள்ளித்திரை, சின்னத்திரையில் இரண்டிலும் முக்கியமான ரோல்களில் இயக்குனர்கள் நடிப்பது சகஜமாகி விட்டது. அந்த வகையில் அஜித்தின் சிட்டிசன் படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன இயக்குனர் சரவண சுப்பையா. இவர்  டிடெக்டிவ் ரோலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் ‘மந்திர புன்னகை’ குறுந்தொடரில் என்ட்ரி கொடுக்கிறார். 2001-ஆம் ஆண்டு அஜீத்குமார், வசுந்துரா தாஸ், நக்மா மற்றும் பலர் நடிப்பில் உருவான சிட்டிசன் திரைப்படம் அஜித்துக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்த திரைப்படம் ஆகும்.

    க்யூட்.. ஸ்வீட்.. ஸ்மார்ட்.. பொறாமை பட வைக்கும் இயக்குனர் அகத்தியனின் மகள்கள்!

    citizen movie director Saravana Subbiah entry on colors Tamil Madhira Punnagai serial
    இயக்குனர் சரவண சுப்பையா


    அதன் பின்பு சரவண சுப்பையா ஒரு சில படங்களை இயக்கினார். பின்பு நடிப்பிலும் தனது கவனத்தை திருப்பினார். விசாரணை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலி சோடா 2 படத்தில் வில்லனாக நடித்தார். இப்படி நடிப்பில் வெவ்வேறு பரிமாணத்தில் மிரட்டி வரும் இயக்குனர் சரவண சுப்பையா மந்திர புன்னகை தொடரில் டிடெக்டிவ் ரோலில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    உண்மை என்பது, கற்பனையையும், புனைவையும் விட விசித்திரமானது என்ற கருத்தியலை வலியுறுத்துகின்ற மந்திர புன்னகை தொடர் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தொடரில் மெர்ஷீனா நீனு , உசைன் அஹமத், நியாஸ் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். தனது தங்கைக்காக காதலுடன் களத்தில் இறங்குகிறார் ஹீரோயின். கடைசியில் அவரின் தங்கை கிடைத்தாரா? குருவ், கதிர் ஒன்றாக சேர்ந்தார்களா? என்பது தான் இந்த சீரியலின் ஒன்லைன்.

    மந்திர புன்னகை சீரியல் நெடுந்தொடராக இல்லாமல் 150 எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் குறுந்தொடர் ஆகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி