அரசு அனுமதி அளித்தும் தொடங்கப்படாத சின்னத் திரை படப்பிடிப்பு - சிக்கல்கள் என்னென்ன?

தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், அதன் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்...

அரசு அனுமதி அளித்தும் தொடங்கப்படாத சின்னத் திரை படப்பிடிப்பு - சிக்கல்கள் என்னென்ன?
கோப்பு படம்
  • Share this:
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே, திரைத்துறையிலும், சின்னத் திரையிலும் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 50-க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புப் பணிகள் முடங்கிப் போயின. 4-வது கட்ட ஊரங்கின்போது, சின்னத்திரை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆரம்பத்தில் 20 பணியாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்த தமிழக அரசு, பின்னர் சின்னத்திரை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று 60 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

எனினும், பெரும்பாலான தொடர்களுக்கான படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் உள்ளதால் அவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் இணைவதற்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.


மேலும், வெளிமாநிலத்தில் இருந்து படப்பிடிப்பில் பங்கேற்க வரும் நடிகர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால் அது படப்பிடிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

படப்பிடிப்பு நடத்தும் தளங்களுக்கு உரிய அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், படப்பிடிப்பு தளங்களை வைரஸ் தொற்று இல்லாமல் துப்புரவு செய்வதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறுகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்கும் அனைத்து ஊழியர்களுக்கும் காப்பீடு என்பதில் கண்டிப்புடன் இருப்பதால் அனைத்து ஊழியர்களுக்கும் காப்பீடு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று நம்பிக்கை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் .மேலும் படிக்க...

கொரோனாவை நிறுத்து! அப்புறம் தேர்வை நடத்து! - எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்

 

First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading