• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’100 நாட்கள் என்னால் நடிக்க முடியாது’ - பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா!

’100 நாட்கள் என்னால் நடிக்க முடியாது’ - பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா!

அபிஷேக்

அபிஷேக்

கொசுவர்த்தி மீது வந்து அமரும் கொசுவுக்கு இம்யூனிட்டி வந்துள்ளதைப் போல, எதையும் எதிர்கொள்ளும் சாதூர்யம் தனக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5-ல் 4-ம் போட்டியாளராக யூ-ட்யூப் பிரபலம் அபிஷேக் ராஜா அறிமுகப்படுத்தப்பட்டார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் பிக் பாஸ் 5-ல் 4-வது போட்டியாளராக இணையப் பிரபலம் அபிஷேக் ராஜா அறிமுகப்படுத்தப்பட்டார். நிறைய நேர்க்காணல்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அபிஷேக், நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டதாகக் குறிப்பிட்டார். கொசுவர்த்தி மீது வந்து அமரும் கொசுவுக்கு இம்யூனிட்டி வந்துள்ளதைப் போல, எதையும் எதிர்கொள்ளும் சாதூர்யம் தனக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தன்னால் 100 நாட்கள் பொய்யாக நடிக்க முடியாது என்பதால், நான் நானாக இருக்கப் போகிறேன் என்றும் கூறினார்.



    இதையடுத்து இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அபிஷேக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார் கமல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: