Home /News /entertainment /

முடிய போகும் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? இணையத்தில் பரவும் தகவல்!

முடிய போகும் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? இணையத்தில் பரவும் தகவல்!

சித்தி 2

சித்தி 2

ராதிகா, கலைஞர் தொலைக்காட்சிக்காக பொன்னி C/o ராணி என்ற சீரியலை எடுத்து வருகிறார். அந்த சீரியல் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலான சித்தி 2 கூடிய விரைவில் முடிய போவதாக இணையத்தில் தகவல் வேகமாக  பரவி வருகிறது.

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ராதிகா சீரியலில் இருந்து பாதிலேயே வெளியேறி விட்டார். இதனால் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஆனாலும் சித்தி என்ற பெயருக்காவே சிலர் இந்த சீரியலை மிஸ் செய்யாமல் பார்த்து வந்தனர். அதுமட்டுமில்லை சித்தி 2வின் விறுவிறுப்பான கதை காரணமாக சீரியல் தொடர்ந்து வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாக தொடங்கியது.
    'சித்தி 2' சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஹீரோயினாகவும், கவின் என்ற கேரக்டரில் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர்.இவர்களின் கெமிஸ்ட்ரி சோஷியல் மீடியாவில் பயங்கர ஹிட்.

    முத்தழகுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பூமி செய்த துரோகம்!

    கதைப்படி யாழினி தான் ராதிகாவின் மகள், ராதிகாவிடம் வளரும் வெண்பாவின் நிஜ அப்பா அம்மா, கவினின் மாமா- அத்தை. தெரிந்தோ தெரியாமலோ தனது அத்தை மகனை தான் வெண்பா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது யாழினிக்கு பிடிக்கவில்லை இதனால் கவினின் அம்மாவுடன் சேர்ந்து வில்லத்தனங்களை செய்து வருகிறார். இப்படி தான் கதையோட்டம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சித்தி 2 சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

    முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்? ரசிகர்கள் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!

    தற்சமயம் ராதிகா கலைஞர் தொலைக்காட்சிக்காக பொன்னி C/o ராணி என்ற சீரியலை எடுத்து வருகிறார். அந்த சீரியல் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் சஞ்சீவ் மனைவி பிரீத்தி முக்கிய ரோலில் நடிக்கும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது, இப்படி இருக்கையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் எபிசோடுகளை ஒளிப்பரப்புங்கள் என்றும், கவின் வெண்பா ஜோடியை ஆன் ஸ்கிரீனில் மிஸ் செய்வோம் என்றும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Radhika, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி