ஆதித்யா சேனலில் ஆங்கராக இருந்தவர் ராதிகாவின் மகளானார்! சித்தி 2 யாழினி சீக்ரெட்ஸ்

சித்தி 2 சீரியல்

சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு, அதிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லலாம் என நினைத்தவர் சன் டிவிக்கு விண்ணப்பித்தார்.

 • Share this:
  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலில் யங் வில்லியாக கலக்கும் யாழினி பற்றி அவரின் ரசிகர்களுக்கு தெரியாத சீக்ரெட்ஸ்

  சமீப காலமாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மனதை எளிதில் வென்றுவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் டிவி சேனல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகள் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிவிடுகின்றனர். இவர்களை சமூகவலைத்தளங்ளில் பின்தொடர்வதும், அவர்களின் பர்சனல் லைஃப் குறித்து தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் பெருமளவில் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் சித்தி 2 சீரியலில் யாழினியாக நடிக்கும் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் கோலசா சின்னத்திரைக்கு வந்த கொஞ்ச நாளிலே மிகப் பெரிய அளவில் ரீச்சாகியுள்ளார். பார்க்க மெழுகு சிலை போல் இருக்கும் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் மவுசு அதிகம். இன்ஸ்டாவில் இவருக்கு தனியாக ஃபேன்ஸ் பேட்ஜூம் உண்டு.

  வட இந்திய பெண்ணான தர்ஷனாவுக்கு சித்தி 2 சீரியல் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சுவாரசியமான கதை. இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் திருச்சியில் தான். ஃபேஷன் டிசைனிங் படிப்பை ஆர்வத்துடன் எடுத்து படித்தவர் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய வேண்டும் என்ற ஆசையுடனே சென்னை வந்தார். ஆனால் நடந்ததோ வேறு. முதலில் சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு, அதிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லலாம் என நினைத்தவர் சன் டிவிக்கு விண்ணப்பித்தார். ஆனால் இவரின் அழகான தோற்றத்தால் ஆங்கரிங் வாய்ப்பு தேடி வந்தது. ஓகே சொல்லி தனது கெரியரை தொடங்கினார்.

  ஆதித்யா சேனலில் “சிரித்திடு சீசே” என்ற லைவ் ஷோவை ஆங்கரிங் செய்தவருக்கு அடுத்தது சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகளாக நடிக்க, சற்றும் யோசிக்காமல் நடிக்க தொடங்கியவர் இன்று வில்லியாக யாழினி ரோலில் கலக்கி வருகிறார். ஏகப்பட்ட ஃபேன்ஸ் வேற. நடிகர் விஜய் என்றால் யாழினிக்கு உயிர். கல்லூரி நாட்களில் இருந்தே ஒரு படத்தையும் மிஸ் செய்ய மாட்டாராம். அதே போல் நடிப்பில் ராதிகாவை ரோல் மாடலாக எடுத்து கொண்டு நடித்து வருவதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். முதல் சீரியலிலே எதிர்பாராத அளவுக்கு ரீச் கிடைத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Dharshna Sripal Golecha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_dharshhh)


  தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரவஸ்தியும் சீரியலில் யசோ கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் வில்லியின் மகளாக நடிக்கிறார். தற்போது சீரியல் போற போக்கை பார்த்தால் இவரும் அம்மாவின் பேச்சை கேட்டு வில்லியாக மாறிவிடுவார் போல. சின்னத்திரையில் யங் வில்லி என பெயர் எடுத்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடைத்தை பிடித்துவிட்டார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: