சன் டிவியில் ராதிகாவின் சித்தி சீரியல் மெகா ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து தற்போது சித்தி 2 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு அழகான கூட்டுக்குடும்பக் கதை, இந்த அழகான குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார் டீச்சர் சாரதா. டீச்சர் சாரதாதான் ராதிகா. கதையின் முக்கியமான கதாபாத்திரம்.
இந்த சித்தி-2 சீரியலில் வெண்பா கவின் இடையேயான காதல் ரொமான்ஸ் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசபட்டு வருகிறது. இவர்கள் இருவரும்தான் இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயின். கவின், வெண்பாவை தீவிரமாக காதலித்து வருகிறார், ஆனால் அவருக்கு யாழினியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. யாழினி கவினுடைய மாமா மகள் ஆவார்.
இந்நிலையில் யாழினியும் கவினை காதலிக்க பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயக்கப்பட்டு நடக்க உள்ளது. இதற்கிடயே வெண்பா கழுத்தில் வெண்பாவிற்கே தெரியாமல் கவின் தாலி கட்டி விட்டார். இதுதான் தற்போதைய எபிசோடின் பரபரப்பு காட்சிகள்.
இந்நிலையில் கவின் தாலி கட்டியதை மறுக்கும் வெண்பா யாழினியுடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று சொல்கிறாள். ஆனால் கவின் கட்டிய தாலியை சித்திக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.
சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போதே முத்தம் கொடுக்கிறார் கவின். அதை தடுக்காமல் கண்களில் நீர் வழிய ஏற்றுக்கொள்கிறார் வெண்பா. இப்படி தாலி கட்டிய பிறகு இவர்களுகிடையே அடிக்கடி யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் நடக்கிறது. ஆனால் வெண்பா அதை ஏற்க மறுகிறார். காரணம் சித்திக்குதான் செய்து கொடுத்த சத்தியத்திற்காகவும் யாழினிக்காகவும்.
ஆனால் கவினோ எந்த பிரச்சணை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
என் அம்மா, உன் சித்தி என யார் தடுத்தாலும் பார்த்துக் கொள்கிறேன் நீ என்னை காதலிப்பது எனக்கு தெரியும் உண்மையை கூறிவிடு என கவின் கேட்கிறார். ஆனால் உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் வெண்பா.
இன்றைய எபிசோட்டின் பிரமோ
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் யாழினிக்கும் கவினுக்கும் திருமணம் நடக்க உள்ளது. கவின் யாழினியின் கழுத்தில் தாலி கட்டுவாரா? அல்லது உண்மையை சொல்லிவிட்டு வெண்பாவின் கரம் பிடிப்பாரா? கவினின் காதலை வெண்பா ஏற்றுக் கொள்வாரா? திருமணம் நின்று போனால் யாழினியின் மனநிலை எப்படி இருக்கும் சித்தி- 2-வில் இனி வரும் எபிசோடுகள் பரபரபப்பான திருப்பங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.