‘சித்தி 2’ சீரியலில் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் மாற்றம் - ராதிகா சரத்குமார் தகவல்

சித்தி 2 சீரியலில் சில நடிகர்கள் மாற்றப்பட்டிருப்பதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

‘சித்தி 2’ சீரியலில் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் மாற்றம் - ராதிகா சரத்குமார் தகவல்
சித்தி 2 குழு
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறமிருந்தாலும் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிக்கல்களும் இருக்கின்றன.

இதனால் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ‘சித்தி 2’ சீரியல்களில் சில நடிகர்கள் மாற்றப்பட்டிருப்பதாக அத்தொடரில் நடிக்கும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து புகைப்படத்துடன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ராதிகா சரத்குமார், “சித்தி 2 தொடர்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டிருக்கும் சித்தி 2 தொடரின் குழுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்வண்ணன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நிழல்கள் ரவி இடம்பெற்றுள்ளார். விரைவில் ‘சித்தி 2’ தொடரில் யாரெல்லாம் இடம்பெறவில்லை என்ற தகவலும் தெரிய வரும்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading