• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 12 வது படிக்கும் போதே தொடங்கிய பயணம்.. ராதிகா விலகியும் சித்தி 2வில் வெண்பா நடிக்க முக்கிய காரணம்!

12 வது படிக்கும் போதே தொடங்கிய பயணம்.. ராதிகா விலகியும் சித்தி 2வில் வெண்பா நடிக்க முக்கிய காரணம்!

சித்தி வெண்பா

சித்தி வெண்பா

ராதிகா விலகிய பிறகு பிரீத்திக்கு இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்கலாமா? வேண்டாமா? என பல யோசனைகள் வந்ததாம்

  • Share this:
    சித்தி 2 சீரியலில் ராதிகா விலகிய பிறகும் அந்த சீரியல் தொடர்ந்து வெற்றிக்கரமாக ஓட மிக முக்கிய காரணம் வெண்பாவாக நடிக்கும் பிரீத்தி ஷர்மா தான்.

    வெண்பா - கவின் இந்த ஜோடிக்கு சோஷியல் மீடியாவில் இருக்கும் ரீச் மிகப் பெரியது. அதிலும் டிக் டாக் மூலம் பிரபலமான பிரீத்தி ஷர்மா பற்றி கேட்கவே வேண்டாம். வெண்பாவின் ரியல் நேம் இதுதான். இவரின் சொந்த ஊர் லக்னோ.தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் முதல் சினிமா பயணம் 12 ஆவது படிக்கும் போதே தொடங்கி விட்டது. 11 ஆம் வகுப்பு முடிக்கும் தருவாயில் `கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல’ என்ற டெலி ஃபிலிம் மூலம் இவரின் மீடியா லைஃப் தொடங்கியது. பின்பு அப்படியே மாடலிங்கிலும் கலக்க தொடங்கிவிட்டார்.

    கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது ‘எங்க போன ராசா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. அதன் பிறகு தான் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் அனிதாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நவீனை காதலிக்கும் கல்லூரி பெண்ணாக, ஜனனிக்கு தங்கையாக நடித்திருப்பார். நெட்டிசன்கள் மத்தியில் நவீன் – அனிதா ஜோடி பிரபலமாகியது. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தொடர்ந்து இருவரும் டிக் டாக்கில் ஜோடியாக கலக்கினர். திருமணம் தொடரின்போது இந்த ஜோடி ரியலாகவே காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நவீனுக்கு சின்னத்திரை நடிகையுடன் நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது.

    திருமணம் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே ப்ரீத்தி சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். அதற்கு காரணம், அவருக்கு கிடைத்த சித்தி 2 சீரியல் வாய்ப்பு தான். மிகப் பெரிய ஹிட் ஆன சித்தி சீரியலின் 2ம் பாகத்தில் ராதிகாவின் வளர்ப்பு மகளாக நடிக்க பிரீத்திக்கு வாய்ப்பு கிடைக்க அப்படியே சன் டிவியில் வெண்பாவாக செட்டில் ஆனார். ஆனால் திடீரென்று ராதிகா சீரியலில் இருந்து விலகினார். இனி சீரியல் நிலைமை என்னவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த போது மொத்த சீரியலையும் தாங்கி நிற்கும் தூண் போல் வெண்பா கதாபாத்திரம் மாற்றப்பட்டது.




    இந்த தொடரில் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெண்பா – கவின் ரொமான்ஸ் வைத்துக்கொண்டு இந்த சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. ராதிகா விலகிய பிறகு பிரீத்திக்கு இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்கலாமா? வேண்டாமா? என பல யோசனைகள் வந்ததாம். இதுக் குறித்து தனது குடும்பத்தினரிடமும் ஆலோசனை கேட்டாராம். பின்பு தைரியமாக நடிப்பை நம்பி களத்தில் இறங்கினார். இன்று ஜெயித்தும் விட்டார். சொல்லப்போனால் சித்தி 2ன் சீரியலின் ஹீரோயினே பிரீத்தி தான். அடுத்தது வெள்ளித்திரையிலும் கால் பதித்து விட்டார். கருணாஸ் மகனுடன் இவர் நடித்துள்ள படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: