Home /News /entertainment /

கூடிய விரைவில் அது நடக்க போகுது.. சித்தி 2 கவின் குறித்து வெளியான குட் நியூஸ்!

கூடிய விரைவில் அது நடக்க போகுது.. சித்தி 2 கவின் குறித்து வெளியான குட் நியூஸ்!

சித்தி 2 கவின்

சித்தி 2 கவின்

சித்தி 2 சீரியலில் டூயல் ரோலில் கலக்கி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் சீரியல் முடிக்கப்பட்டது.

    சித்தி 2 சீரியல் புகழ் கவின் கூடிய விரைவில் சன் டிவியில் புத்தம் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கசிந்தது முதலே கவினுக்கு ஜோடியக பிரீத்தி தான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் அடம் பிடிக்கின்றனர்

    வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகர் நந்தன். பெரும் விமர்சனங்களை பெற்ற லட்சுமி என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்தவர். சித்தி 2 சீரியலில் கவினாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பேரும் புகழும் சம்பாதித்து இருக்கிறார்.
    சித்தி 2 சீரியலில் வெண்பா- கவின் ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களுக்கிடையே உள்ள ரொமான்ஸ் ரசிகர்களை மேலும் அந்த சீரியலை பார்க்க தூண்டியது. நந்தன் தற்போது சின்னத்திரையின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். பல தடைகளை தாண்டி இந்த இடத்தை நந்தன் சொந்தமாக்கியுள்ளார்.

    வானத்தை போல சீரியலில் சின்ராசு - துளசிக்கு பொன்னி கொடுத்த பெரிய ஷாக்!

    பாலுமகேந்திரா படத்தில் நந்தன் நடிக்க இருந்தது ஆனால் பாலுமகேந்திரா படம் பாதியில் ட்ராப் ஆகியதால் அவரின் வெள்ளித்திரை முயற்சி தோல்வியில் முடிந்தது. மனம் தளராதவர் மீண்டும் முயற்சித்தார். கட்டம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அதுவும் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை. பின்பு ஒருசில ரியாலிட்டி நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதுதான் தனது நண்பனான டைரக்டர் சர்ஜூன் எடுத்த லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்தார்.

    ஆஸ்பிட்டலில் கோபி.. பதறி ஓடி வரும் பாக்கியா -ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்க போவது என்ன?

    பிறகு கலர்ஸ் தமிழில் வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் சித்தார்த் என்ற கேரக்டரில் நடித்தார். . இந்த தொடருக்கு ரசிர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைதொடர்ந்து 2019ல் சித்திரம் பேசுதடி சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்தார். இதன் பிறகு தான் சித்தி 2 வில் கவின் ரோலில் நடிக்க  நந்தனை கேட்டுள்ளனர். ராதிகா சீரியல் என்றதும் உடனே ஓகே சொல்லி நடிக்க தொடங்கினார். இந்த சீரியலுக்கு பிறகு கவினுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃபேன்ஸ்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    சித்தி 2 சீரியலில்  டூயல் ரோலில் கலக்கி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் சீரியல் முடிக்கப்பட்டது. வெண்பா - கவின் ரசிகர்கள் அப்செட் ஆகினர். மீண்டும் இந்த ஜோடிகளை ஸ்கிரீனில் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நந்தன் சன் டிவியில் மீண்டும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் நந்தனுக்கு ஜோடியாக நடிப்பது யார் ? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை ஆனால் ரசிகர்கள் அவரின் பெஸ்ட் கோ ஸ்டார் பிரீத்தி சர்மா தான் அதில் நந்தனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி