• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 19 வருடங்களுக்குப் பிறகு தங்கச்சி பாப்பா பிறந்த மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை!

19 வருடங்களுக்குப் பிறகு தங்கச்சி பாப்பா பிறந்த மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை!

நேகா மேனன்

நேகா மேனன்

சித்தி 2, பாக்யலட்சுமி சீரியல் நடிகை நேகா மேனன், தனக்கு தங்கை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    தன் அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்டிருக்கிறார் சீரியல் நடிகை நேகா மேனன்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான 'சித்தி 2' மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்யலட்சுமி' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்யலட்சுமி’ சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.



    குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 'நாரதன்' மற்றும் 'ஜாக்சன் துரை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தனது குடும்பத்தில் சில நல்ல செய்திகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், நேரம் வரும்போது அதை தான் வெளிப்படுத்துவதாகவும் சமூக வலைதளத்தில் கூறியிருந்தார் நேகா. இந்நிலையில் தனது தாய் கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது அவருக்கு பெண் குழந்தையை பிறந்திருப்பதாகவும், அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார்கள் எனவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நேகா.

    chithi 2 baakiyalakshmi Serial Actress Neha Menon Mother gives birth to a baby girl after 19 years
    கர்ப்பிணியாக நேகாவின் அம்மா


    நேஹா 2002-ஆம் ஆண்டில் பிறந்தார். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சகோதரியைப் பெற்றுள்ளார். மேலும் தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்க காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை ட்ரோல் செய்பவர்களுக்கு "இந்த செய்திக்கு கிடைக்கும் குப்பை பதில்களுக்கு, நான் எதுவும் செய்யப்போவதில்லை. எனவே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்" எனக் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: