சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தை போல சீரியலில் வில்லி அவதாரம் எடுத்து இருக்கும் பொன்னி , சின்ராசு - துளசிக்கு அடுத்த அதிர்ச்சியை தருகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சீரியல் வரலாற்றில் முதன் முறையாக ஒட்டு மொத்த ரசிகர்களும் வில்லி ரோலை ரசிப்பது இதுவே முதன் முறை. இதற்கு முன்பு பல சீரியல்களில் வில்லியின் நடிப்பு, அழகு, அவர் பேச்சு போன்ற காரணத்தினால் அந்த ரோலுக்கு ரசிகர்கள் உருவாகி இருப்பார்கள். ஆனால் வானத்தை போல சீரியலில் வில்லி செய்வதே சரி, இவர்களை இப்படி தான் பழிவாங்க வேண்டும் ,இப்படியே செய். என வில்லியின் கதாபாத்திரத்தையே ரசிகர்கள் கொண்டாடி அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர். அந்த அளவுக்கு வானத்தை போல பொன்னி ரோல் ரசிகர்கள் மத்தியில் ஃபேம்ஸ்.
அந்த கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ஆல்யா - சஞ்சீவ்
இவ்வளவு நாளாக பொன்னி அமைதியான பெண் போல் தான் இருந்தார். துளசி, சின்ராசு அம்மா, அப்பா, அண்ணன் ராஜபாண்டியிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்வார். ஆனால் சின்ராசு, தனது தங்கை கணவரின் பேச்சை கேட்டு, அவரின் உயிருக்காக பொன்னி கழுத்தில் தாலி கட்டினாரோ அன்றே தனது வில்லி முகத்தை கொண்டு வந்துவிட்டார். இப்போது இந்த சீரீயலின் வில்லியே இவர் தான். தனது ரோலை மாற்றிக் கொண்டு சின்ராசு, துளசி, என மொத்த குடும்பத்தையும் ஓட விடுகிறார்.
அந்த தகவல் பொய், நம்பாதீங்க.. ரசிகர்களிடம் கேட்டு கொண்ட பிக் பாஸ் ராஜூ!
பொன்னி - சரவணன் காதலித்தது, திருமணம் ஆகாமலே அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது என உல்லா உண்மைகளும் சின்ராசு - துளசிக்கு தெரியும். ஆனால் தனது தங்கை மீது அளவுக்கடந்து அன்பு வைத்திருக்கும் சின்ராசு, அவரின் கணவர் ராஜபாண்டி கத்தி குத்துப்பட்டு தரையில் கிடந்த உடனே அவரின் உயிரை காப்பாற்ற அவர் பேச்சை கேட்டு பொன்னி கழுத்தில் தாலி கட்டி விட்டார். இதை பொன்னி எதிர்பார்க்கவில்லை. தனக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க இப்போது வில்லியாக மாறிவிட்டார் பொன்னி.
இன்றைய எபிசோடு புரமோவில், ராஜபாண்டி - துளசி வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும் பொன்னி வாந்தி எடுக்கிறார். துளசிக்கு உடனே சந்தேகம் வருகிறது. வாந்தி எடுத்த பின்பு பொன்னி, உங்கள் எல்லோரிடமும் மிகப் பெரிய உண்மையை சொல்ல போவதாக ட்விஸ்ட் கொடுக்கிறார். அதாவது சரவணனால் தான் கர்ப்பமாக இருப்பதாக துளசி சொல்வார்? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி பொன்னி சொன்னால் அது சின்ராசு வாழ்க்கையையே புரட்டி போடும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடும். துளசியும் ராஜ பாண்டியும் உடைந்து போய்விடுவார்கள். அப்படி என்ன ரகசியத்தை பொன்னி கூற போகிறார் என்பது இன்று இரவு எபிசோடில் தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.