ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

19 வருட போராட்டம்.. ரிஸ்க் எடுத்து படத்தில் நிர்வாணமாக நடித்த விஜய் டிவி பிரபலம்!

19 வருட போராட்டம்.. ரிஸ்க் எடுத்து படத்தில் நிர்வாணமாக நடித்த விஜய் டிவி பிரபலம்!

நடிகர் பிரஜின்

நடிகர் பிரஜின்

19 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன் இதுவரை 23 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன் என கூறியுள்ள பிரஜின் சிறந்த வெற்றிக்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக உருக்கமாக கூறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி பிரபலம் பிரஜின் தனது புதிய படத்தில் இயக்குனர் கேட்டுக் கொண்டதால் நிர்வாணமாக நடித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

  சின்னத்திரையில் பல வருடங்களாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நடிகர் பிரஜின் பத்மநாபன் 19 வருடங்களாக வெள்ளித்திரை வெற்றிக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார். சின்னத்திரை பிரஜினுக்கு மிகப் பெரிய வரவேற்பை வாங்கி தந்துள்ளது. ஆனால் வெள்ளித்திரை அவர் நினைத்த வெற்றியை இன்னும் தரவில்லை. ஆனாலும் அதை நினைத்து மனம் தளராத பிரஜின் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பிரஜின் நடிப்பில் தற்போது டி3 என்ற திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.

  மீண்டும் சீரியலுக்கு வரும் செம்பருத்தி ஆதி.. எகிறும் எதிர்பார்ப்பு!

  இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது.இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரைலர்  வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ஹீரோ பிரஜின் கலந்து கொண்டு பேசினார்.


  19 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன் இதுவரை 23 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன் என கூறியுள்ள பிரஜின் சிறந்த வெற்றிக்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக உருக்கமாக கூறினார். அதுமட்டுமில்லை மற்ற எல்லா படங்களை விடவும் டி3 தனக்கு சிறந்த பெயரை வாங்கி தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதன்முறையாக பிரஜின் போலீஸ் கதையை தேர்ந்தெடுத்து இந்த படத்தில் நடித்து இருக்கிறார். அதுவும் கதையின் தேவை கருதி இயக்குனர் கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் ஆடை இன்றி நிர்வாணமாக நடித்துள்ளேன் எனவும் பிரஜின் ஓப்பனாக பேசியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Kollywood, Tamil Cinema, TV Serial, Vijay tv