• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’எனக்கு திருமண வாழ்க்கையில் ராசியே இல்லை’ - சின்னத்தம்பி பாவனி ரெட்டி!

’எனக்கு திருமண வாழ்க்கையில் ராசியே இல்லை’ - சின்னத்தம்பி பாவனி ரெட்டி!

பாவனி ரெட்டி

பாவனி ரெட்டி

பிக் பாஸ் சீசன் 5-ல் சின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டி அறிமுகப்படுத்தப்பட்டார்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5-ல் 8-வது போட்டியாளராக ‘சின்னதம்பி’ சீரியல் ஹீரோயின் பாவனி ரெட்டி பங்கேற்றுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.



    அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5-ல் சின்னத்தம்பி சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி அறிமுகப்படுத்தப்பட்டார். சராசரி பெண்ணாக 23 வயதில் திருமணம் செய்துக் கொண்டு, கணவர், குழந்தை என வாழ வேண்டும் என நினைத்த பாவ்னிக்கு, அது தோல்வியில் முடிந்ததாகக் குறிப்பிட்டார். தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதைக் குறிப்பிட்டு, திருமண வாழ்க்கையில் தனக்கு ராசியில்லை என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: