"கவின் - லாஸ்லியா காதல்... நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்..." மனம் திறந்த சேரன்

news18
Updated: November 10, 2019, 1:11 PM IST
கவின் | சேரன்
news18
Updated: November 10, 2019, 1:11 PM IST
கவின் - லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் - லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன.

இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் - லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ, வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் இயக்குநர் சேரன், “சேரப்பா என்ற வார்த்தை அனைவருக்கும் ஒரு நெருக்கமான வார்த்தையாக மாறியதற்கு லாஸ்லியா தான் காரணம். லாஸ்லியா என்னைப் பார்த்தவுடன் எனது அப்பா போல் இருப்பதாக கூறியதாலும், என்னை அப்பா என்றே கூப்பிடு என்று சொன்னதால் தான் அந்த உறவு மிகவும் அழகானது.

நான் லாஸ்லியாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நாட்களில் ஒரு அப்பாவாக நான் என்ன அக்கறை செலுத்த வேண்டுமோ அதை செய்தேன். ஒரு மகளாக என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டியதை லாஸ்லியா தெரிந்து கொண்டார். அந்த வகையில் அந்த உறவு அழகாக இருந்தது.

இடைப்பட்ட காலகட்டங்களில் லாஸ்லியாவுக்கு சில தடுமாற்றங்கள் ஏற்பட்டது. அப்போது கூட அவர் என்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

Loading...சாக்‌ஷியை என் தங்கையாக நினைத்து அவர் பிரச்னைகளுக்காக அக்கறை செலுத்தினேன். பொதுவாக எல்லோரிடத்திலும் தனிப்பட்ட அக்கறை காட்டினேன். ஏன் கவினிடம் கூட அப்படித்தான் இருந்தேன். ஆனால் ஒவ்வொருவருடைய புரிதலும் மாறும் அல்லவா.

ஒரு சிலர் கேம்க்காக இப்படி செய்கிறார் என்று புரிந்து கொள்கிறார்கள். அது காலப்போக்கில் அவர்களுக்கே தெரிய வரும்.

லாஸ்லியா என்னை அப்பா என்று அழைப்பதை ஒத்துக் கொண்டதற்கு காரணம், அவர் தனது அப்பாவைப் பார்த்து 10 வருடமாகிவிட்டது என்று சொன்னதுதான். அந்த வலி பிடித்திருந்தது. அதனால் தான் அதை ஏற்றுக் கொண்டேன்.

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து சுமார் 50 நாட்களான பிறகு கவினுடன் ஒரு ஈர்ப்பு வருகிறது. தங்களது எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது அவர்களது வயதின் வெளிப்பாடு.

இது அவர்களின் பெற்றோர்களை எப்படிப் பாதிக்கும் என்ற பயம் தான் எனக்கு இருந்தது. நான் ஒரு பெற்றோராக இருந்துதான் அதை நான் உணர்கிறேன். கவினுடைய பெற்றோரை நினைத்தும் நான் வருத்தப்பட்டேன்.

வெளியிலிருக்கும் பெற்றோர்கள் என்ன மாதிரியான சங்கடங்களை எதிர்கொள்வார்கள் என்று நினைத்ததால் தான் உள்ளே இருக்கும் போது வேண்டாம், குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கவின் அந்த இடத்தில் தான் என்னைத் தவறாக புரிந்து கொண்டார். நான் டிராமா பண்ணுவதாக நினைத்தார். இதை வைத்து நான் பெயர் எடுத்துக் கொள்வதாக நினைத்தார். அது எனக்கு வருத்தமாக இருந்தது.

நான் பல படங்களை இயக்கி பெயர் வாங்கி விட்டேன். இதை வைத்து பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையிலேயே எனக்கு இந்த இரண்டு மனசுகளின் மீதான அக்கறையும், அவர்களது பெற்றோர் மீதும் தான் இருந்தது.

நான் லாஸ்லியா அப்பா உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்குள் இருந்த தடுமாற்றங்கள் யோசனை, அந்த ஒரு மணி நேரத்தில் அவருடைய அப்பா வெளிப்படுத்தினார். அப்போது தான் நாம் சரியாகத் தான் சிந்திக்கிறோம் என்று தோன்றியது.

நான் கவின் - லாஸ்லியா காதலுக்கு தடையாக இருப்பதாக 15 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். அந்த வயது அப்படி. நானும் அந்த வயதில் காதலித்திருகிறேன். அப்போது என்னுடைய அம்மா- அப்பா சொல்வது எனக்கு கஷ்டமாக இருக்கும். அந்த மனநிலை தான் இந்த வயதில் இருப்பவர்களிடம் வெளிப்படும். எனவே அதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்காக சமூகவலைதளங்களில் கோபப்பட்டு ஆபாசமாக பதிவிடுவதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. காலம் தான் சிறந்த ஆசான்.” என்று கூறியுள்ளார்.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...