தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் - ரம்யா பாண்டியன் முதலிடம்!

டாப் 20 நடிகைகள்

2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

  • Share this:
தமிழ் திரையுலகம், லைஃப் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் ஸ்டோரிஸ் மற்றும் சிட்டி அப்டேட்ஸ் உள்ளிட்டவற்றிற்கு புகழ் பெற்றது சென்னை டைம்ஸ். இந்நிலையில் 2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்த 20 பிரபலங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

1. ரம்யா பாண்டியன்2020ம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் 4-வது சீசன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் முதலிடம் பெற்றுள்ளார். இதற்கு அவரது யூகிக்க முடியாத ஆளுமை தான் காரணமாக உள்ளது.

ALSO READ |  'என் பெற்றோர் பிரிந்ததில் மகிழ்ச்சி’ - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!

தேசிய விருது பெற்ற திரைப்படமான ஜோக்கரில் நடித்து ஏற்கனவே பலரை கவர்ந்த இவர், டிவி நிகழ்ச்சிகளில் தோன்றும் போது நனைத்து பக்கத்து வீடு பெண் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துகிறார். குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியாகட்டும், பிக் பாஸ் ஆகட்டும். இவரது தலைசிறந்த கலவையே Chennai Times 20 Most Desirable Woman On Television 2020 என்ற பட்டியலில் இவர் முதலிடம் பிடிக்க காரணமாக இருக்கிறது.

2. ரோஷ்னி ஹரிபிரியன்:விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்னி ஹரிபிரியன் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்த பிறகு, ரோஷ்னி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் வீட்டில் ஒருவராக மாறி விட்டார்.

3. பவித்ரா லட்சுமிஉங்களில் யார் அடுத் பிரபு தேவா மற்றும் மானாட மயிலாட போன்ற நடன ரியாலிட்டி ஷோக்களில் தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்ந்தார். குக்வித் கோமாளி 2ல் பங்கேற்று இறுதி வரை வந்து பிற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து மூன்றாமிடம் பிடித்த பவித்ரா லட்சுமி, தொலைக்காட்சி 2020-ல் மிகவும் விரும்பத்தக்க 20 பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக உள்ளார்.

4. நக்ஷத்ரா நாகேஷ்ஆங்கரிங் மற்றும் திரைப்பட பணிகள் நடிகை நக்ஷத்ராவை பிஸியாக வைத்திருக்கின்றன. கடந்த ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்து பார்வையாளர்களை ஈர்த்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலதிபர் ராகவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

5. ஆயிஷாஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் அழகு, துணிச்சல் மற்றும் புத்திசாலித்தனம் மிக்க சத்யா பிரபு மற்றும் ரவுடி பேபி என்றழைக்கப்படும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆயிஷா. தனக்கு தகுந்த அமுல் பேபியை, இந்த ரவுடி பேபி கண்டுபிடித்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது.

ALSO READ |  ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவளித்த விஜய் ரசிகர்கள்!

6. ஷிவானி நாராயணன்தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் ஷிவானி நாராயணன். இவர் "பகல் நிலவு" சீரியலில் நாயகியாக நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். கடந்த ஆண்டில், பிக் பாஸ் 4 தமிழ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சுயத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

7. ஆல்யா மானசாஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களிடையே மிக பிரபலமானவர். இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் இவர் நடித்து வருகிறார். நடிகர் சஞ்சீவ் மற்றும் மகள் அய்லாவுடன் இருக்கும் வர சமீபத்தில் ஷேர் செய்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

8. டிடி :20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பேச்சு நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் என பலவற்றை ஆங்கரிங் செய்து தனெக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி. ஸ்பீட் கெட் செட் கோ உள்ளிட்ட சில வேடிக்கையான ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் கடந்த ஆண்டு பிஸியாக இருந்தார். கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று வாழும் டிடி, அவரது தொழிலை நேசிக்கிறார்.

ALSO READ |  வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் சீறும் சின்மயி!!

9. கிகி விஜய்தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் தொகுப்பாளர்களில் ஒருவராக 2020ல் பிசியாக இருந்தவர் கிகி விஜய். மானாட மயிலாட ம், நம்ம ஊரு கலரு உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். நிகழ்ச்சிகளை வழங்குவதைத் தவிர, #KoCoNaKa மற்றும் கணவர் சாந்தனு பாக்யராஜுடன் பல வேடிக்கையான தொடர்களில் இயக்கி நடித்து indie space-ல் நுழைந்தார்.

10.சாந்தினி தமிழரசன்தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2019-ஆம் ஆண்டில் தாழம்பூ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ரெட்டை ரோஜாவில் தனது ‘இரட்டிப்பான’ ஈர்க்கக்கூடிய நடிப்பின் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.

ALSO READ |  தங்களது முதல் குழந்தையை விரைவில் வரவேற்க தயாராக உள்ள சினிமா பிரபலங்கள்!

இவர்களை தவிர இந்த பட்டியலில் 11 முதல் 20 இடங்கள் முறையே அஞ்சனா ரங்கன், சைத்ரா ரெட்டி , பிரியங்கா குமார், வித்யா பிரதீப், ஆஷா கெளடா, ஷபனா ஷாஜகான், டெல்னா டேவிஸ், ஸ்ரேயா அஞ்சன், சம்யுக்தா மற்றும் ஹிமா பிந்து உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: