ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செல்லம்மாவுக்கு கல்யாணம்... மகிழ்ச்சியில் சித்து.. மேகா நிலைமை?

செல்லம்மாவுக்கு கல்யாணம்... மகிழ்ச்சியில் சித்து.. மேகா நிலைமை?

செல்லம்மா

செல்லம்மா

செல்லம்மாவின் அம்மா - அப்பா சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறார்கள் என கூறி முதல் அதிர்ச்சியை தருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செல்லம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் செல்லம்மாவை ராஜகுமாரன் வந்து கல்யாணம் செய்துக் கொள்வான் என்று ஜோசியம் பார்க்கும் பெண் ஒருவர் கூறுகிறார் . இதை கேட்டு சந்தோஷப்படுகிறார் சித்து. 

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா சீரியல் விறுவிறுப்புடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. அவர் தான் உண்மையான வாரிசு என்பது தெரியாமலே அந்த வீட்டில் வேலைக்காரியாக இருக்கிறார் செல்லம்மா . மொத்த குடும்பமும் செல்லம்மா மீது அன்பாக இருப்பது, சித்து செல்லம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மலரை தூக்கி கொஞ்சுவது என இது எல்லாமே மேகாவுக்கு பிடிக்கவில்லை. மேகாவுக்கு அவர் இந்த வீட்டின் வாரிசு இல்லை என்பது தெரியும். ஆனால் இந்த உண்மை எல்லோருக்கும் தெரிய கூடாது என நினைத்து மறைக்கிறார். அதே சமயம் பயந்து பயந்து வாழ்கிறார்.

  Vijay 67: விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ் தரப்போகும் லோகேஷ்!

  இப்படி இருக்கையில் மேகாவை மிகப் பெரிய பிரச்சனையில் இருந்து செல்லம்மா அவரை காப்பாற்ற நேரிடுகிறது. இதில் இருந்து செல்லம்மா மீது மேகாவுக்கும் சாஃப்ட் கார்னர். அதே போல் சித்துவுக்கும் மேகாவை காட்டிலும் செல்லமா மீது அன்பு, பரிதாபம், காதல். இதை அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் எல்லா இடத்திலும் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறார். இது செல்லம்மாவுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கையில்   சித்து - மேகா கல்யாணம் நெருங்கி விட்டதால் குல தெய்வ கோயிலில் பொங்கல் வைக்க எல்லோரும் செல்கின்றனர்.

  செல்லம்மா மொத்த வேலையும் இழுத்து போட்டு செய்கிறார். இந்த நேரத்தில் தான் கோயிலில் ஜோசியம் பார்க்கும் பெண் ஒருவர்  செல்லம்மாவின் கையை பார்த்து ஜோசியம் சொல்கிறார். அப்போது உன்  அம்மா - அப்பா சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறார்கள் என கூறி முதல் அதிர்ச்சியை தருகிறார். அடுத்து கூடிய விரைவில் உனக்கு  2வது திருமணம் நடக்க போகிறது,. ராஜகுமாரன் வந்து கல்யாணம் செய்ய போகிறார். உன் மகள் மலர், இளவரசி ஆக போகிறார் என கூறுகிறார். இதையும் செல்லம்மா நம்பவில்லை. இது எல்லாவற்றையும் பின்னாடி இருந்து கேட்கிறார் சித்து. மூதாட்டி செல்லம்மா கையை பார்த்து இப்படி  சொன்னதும் சித்து வுக்கு சந்தோஷம் தாங்கல. அதெல்லாம் சரி சித்து, அப்ப மேகா நிலைமை?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv