Home /News /entertainment /

’செல்லம்மா’ மறைத்த உண்மையை கண்டுப்பிடித்த மேகா!

’செல்லம்மா’ மறைத்த உண்மையை கண்டுப்பிடித்த மேகா!

செல்லம்மா

செல்லம்மா

நடிகை அன்ஷிதா அக்பர்ஷா, செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    டாப் கியரில் செல்லும் விஜய் டிவியின் புத்தம் புதிய சீரியலான செல்லம்மா தொடரின் பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    மக்களை ஈர்க்கும் வகையில் பல சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ரியாலிட்டி ஷோக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான பல ஹிட் சீரியல்களை கொடுப்பதில் விஜய் டிவி ஸ்பெஷலாக இருந்து வருகிறது.ஸ்டார் விஜய் டிவி-யில் நாள்தோறும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட செல்லம்மா சீரியல் டாப் கியரில் செல்கிறது. நடிகை அன்ஷிதா அக்பர்ஷா, செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். தனக்கு துரோகம் செய்த கணவனை உதறிவிட்டு தனி ஆளாக இருந்து தன் பெண் குழந்தையை வளர்க்கும் செல்லம்மாவை சுற்றி இந்த சீரியலின் கதை பின்னப்பட்டு உள்ளது.

    சின்சியாரிட்டிக்கு மறுபெயர் ஆல்யா.. . சொன்னது யார் தெரியுமா?

    தற்போது மேகாவுக்கு சித்து - செல்லம்மா மீது ஏகப்பட்ட கோபம். செல்லம்மாவுக்கு எல்லா விஷயத்திலும் சித்து உதவி செய்வது பிடிக்கவில்லை. அதே போல் சித்துவுக்கு செல்லம்மா மீது சாஃப்ட் கார்னர்.  செல்லம்மாவின் குழந்தை மலர் மீதும் அவர் பாசத்தை கொட்டுகிறார். இந்நிலையில் முக்கியமான  ப்ராஜெக்ட் ஃபைலை செல்லம்மா தொலைத்து விட்டார். இந்த விஷயம் சித்துவுக்கு தெரிய வருகிறது. அவர் பழியை தன் மீது போட்டுக் கொண்டார்.



    இதனால் அவரின் சி.ஓ பதிவு பறிக்கப்பட்டு மேகா சி.ஓ ஆகிறார். இந்நிலையில் செல்லம்மா தான் ஃபைலை தொலைத்தார் என்ற உண்மையை மேகா கண்டுப்பிடித்து விட்டார். இதை எல்லோரிடமும் சொல்கிறார். செல்லம்மாவும் அதை ஒத்துக் கொள்கிறார். இதனால் எல்லோரும் சித்து மீது கோபத்தை திருப்புகின்றனர். செல்லம்மாவுக்காக ஏன் நீ பழியை ஏற்றுக் கொண்டாய்? என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அதற்கு சித்து சொல்லப்போகும் பதில் தான் சீரியலின் முக்கியமான ட்விஸ்ட்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி