ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருடனான பிரச்னை... சீரியல் நடிகர் அர்னாவிற்கு சம்மன்

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருடனான பிரச்னை... சீரியல் நடிகர் அர்னாவிற்கு சம்மன்

அர்னாவ் - திவ்யா ஸ்ரீதர்

அர்னாவ் - திவ்யா ஸ்ரீதர்

திவ்யா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அர்னாவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி-யின் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து சன் டிவி-யில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்தார். தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார்.

  திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதை அவரே நேர்க்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 2017-ம் ஆண்டு கேளடி கண்மணி சீரியலில் உடன் நடித்த நடிகர் அர்னாவுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். இதனை சில வாரங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டகிராமில் அறிவித்தார் திவ்யா. அதோடு தான் கர்ப்பமாக இருப்பதையும் தெரியப்படுத்தினார்.

  அர்னாவ் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரை திருமணம் செய்துக் கொள்வதற்காக திவ்யா, கடந்த பிப்ரவரி மாதம் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தனது கணவர் அர்னாவ் அவருடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா.

  15 வருட பயணம்... பரதநாட்டியம், வீணை வாசிப்பு என ஆச்சர்யப்படுத்தும் இந்திரஜா சங்கர்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்னாவும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். பின்னர் இருவரும் மாறி மாறி ஃபோன் உரையாடலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், திவ்யா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அர்னாவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக அர்னாவ் வரும் 14-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Sun TV, Vijay tv