Home /News /entertainment /

உடைந்து போயிட்டேன்.. ட்ரோலுக்கு குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷின் பதில்!

உடைந்து போயிட்டேன்.. ட்ரோலுக்கு குக் வித் கோமாளி செஃப் வெங்கடேஷின் பதில்!

செஃப் வெங்கடேஷ் பட்

செஃப் வெங்கடேஷ் பட்

”என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்துக்கொள்ளாதீர்கள்”

    சின்னத்திரையில் மிகப் பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3ல் செஃப் வெங்கடேஷ் பட்டின் கருத்து மிகப் பெரிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இதுத்தொடர்பான ட்ரோல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுக் குறித்த விளக்கத்தை செஃப் பட், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    காமெடியுடன் கலந்த குக்கிங் என்ற கான்செப்டில் மிகப் பெரிய ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 விஜய் டிவியில்  ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான எபிசோடில் செஃப் வெங்கடேஷ் பட் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் தன்னிடம் கூறியதாக  பட் தெரிவித்தார். அவர் பேசியது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாக தொடங்கின. ஏகப்பட்ட ட்ரோல்கள் இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பரவின. அதே நேரம் செஃப்வின் கருத்துக்கு ஆதரவு குரல்களும் ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருந்தன.



    10 வருடம் குழந்தை இல்லாத பெண் ஒருவர் கூட தனது சோஷியல் மீடியாவில் செஃப் பட் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இதுக் குறித்து செஃப் வெங்கடேஷ் பட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரின் இந்த உருக்கமான பதிவு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.



    அதில் பட் கூறியிருப்பதாவது, “ 2 நாட்கள் நிஜமாகவே நொறுங்கி போயிட்டேன்.கவலை அதிகரித்தது. என்னை ட்ரோல் செய்ததால் கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக மீம்ஸ்கள் என்னை உணரவைத்தது. மனிதம் சாக கூடாது, கடவுள் இருக்கார்ர குமாரு.நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள்.கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று. என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்துக்கொள்ளாதீர்கள் “ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் பலரும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி