• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • செஃப் தாமுவின் மகள் தொடங்கிய மருத்துவமனை... குவியும் வாழ்த்துக்கள்!

செஃப் தாமுவின் மகள் தொடங்கிய மருத்துவமனை... குவியும் வாழ்த்துக்கள்!

செஃப் தாமு மகள்

செஃப் தாமு மகள்

மருத்துவமனையின் தொடக்க விழாவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மகளின் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

 • Share this:
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்த செஃப் தாமுவின் மகள் அக்ஷா அண்ணா நகரில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கியுள்ளார்.

  மக்களின் விருப்பத்தை சரியாக கணித்து அதற்கேற்ப ஷோக்களை உருவாக்குவதில் விஜய் டிவி கில்லி என்று சொல்லலாம். அந்த டிவியில் காமெடியை சப்ஜெட்டாக வைத்தே பல ரியாலிட்டி ஷோக்கள் இருக்கின்றன. ஆனால், அண்மையில் நிறைவடைந்த ’குக் வித் கோமாளி’ ஷோ மிகப்பெரிய ஹிட் அடித்தது. 2 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  அந்த ஷோ இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்கு முக்கிய காரணமே, அந்த ஷோவில் வந்த கோமாளிகள் தான். கோமாளிகளாக வந்த புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி ஆகியோர் செய்த சேட்டைகளில் மக்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இப்போதும் கூட, அந்த ஷோவில் இடம்பெற்ற காமெடிகள் இன்ஸ்டாவில் வைரலாக சென்று கொண்டிருக்கின்றன. கோமாளிகளைக் கடந்து ஷோவில் முதலில் இருந்து கடைசி வரை இருந்தவர்கள் என்றால் பிரபல செஃப்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்.

  இவர்களும் நடுவர்களாக இருப்பது மட்டுமின்றி கோமாளிகளுடன் களத்தில் இறங்கி காமெடி பட்டையை கிளப்பினர். இதனால், மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை தேடிக் கொண்டனர். குக் வித் கோமாளி ஷோ முடிந்தாலும், அந்த ஷோவில் பங்கேற்றவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலும் நெட்டிசன்கள் ஆர்வகமாக இருக்கின்றனர்.

  ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்.. ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா?

  அவர்கள் எங்கே சென்றாலும், கன்டென்டாக இருப்பதால் பல யூ டியூபர்கள் குக் வித் கோமாளி பிரபலங்களின் கன்டென்டுகளை பதிவிட்டே தங்களின் சேனலை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, இப்போது செஃப் தாமுவின் மகள் அக்ஷையா அண்ணா நகரில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த மருத்துவமனைக்கு '1434 டென்டல் ஸ்டுடியோ' என பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தொடக்க விழாவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மகளின் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படமும் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

  அக்ஷையா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளனர். மருத்துவமனையின் நோக்கம் குறித்து அவர்கள் பேசும்போது, "பல் சிகிச்சை மட்டுமில்லாமல், முழுமையான பல் மற்றும் முகப் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். போடோக்ஸ், ஃபில்லர் மற்றும் லேசர்கள் உள்ளிட்ட சமீபத்திய மற்றும் மேம்பட்ட முக சிகிச்சை முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் முகத்தின் அழகு மேம்படுவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம்" எனத் தெரிவித்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: