விரைவில் புதிய சாதனை படைக்க உள்ள சன் டிவி மெகா சீரியல்.. உற்சாகத்தில் ஆட்டம் போட்ட நடிகர்கள்!

சந்திரலேகா

தமிழகத்தில் நிறைய தமிழ் சேனல்கள் இருந்தாலும் சன் டிவி-க்கு என்று தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனி இடம் இருக்கிறது.

  • Share this:
பிரபலமாக இருக்கும் தமிழ் சேனல்கள் அனைத்திலுமே தினந்தோறும் தவறாமல் இடம்பெறும் நிகழ்ச்சி சீரியல்கள் தான். காலை முதல் இரவு வரை எல்லா சேனல்களிலும் மாறி மாறி பார்த்தாலும் ஏதாவதொரு சீரியல் ஓடி கொண்டிருக்கும். டான்ஸ் மற்றும் காமெடி ரியாலிட்டி ஷோக்கள் பல ஒளிபரப்பனாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது சீரியல்கள் தான். எனவே தமிழ் சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்கின்றன.

தமிழகத்தில் நிறைய தமிழ் சேனல்கள் இருந்தாலும் சன் டிவி-க்கு என்று தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனி இடம் இருக்கிறது. மெட்டி ஒலி, சித்தி, செல்வி, அண்ணாமலை, நாதஸ்வரம், கல்யாணவீடு தெய்வமகள், ரோஜா உள்ளிட்டஏராளமான ஹிட் சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள சன் டிவி-யில் தினமும் பிற்பகல் 2 மணிக்கு சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2014 அக்டோபர் முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் 7-ம் ஆண்டாய் நெருங்க இருக்கிறது. இதனிடையே தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இந்த சீரியல் விரைவில் ஒரு மிகப்பெரிய புதிய சாதனையை படைக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய மெகா சீரியல்களின் பட்டியலில் வள்ளி சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சந்திரலேகா, வரும் வாரங்களில் 2000 எபிசோட்கள் என்ற மாபெரும் மைல்கல்லை கடக்க இருக்கிறது. சந்திரலேகா சீரியல் இந்த எல்லையை அடைந்தால், 2000 எபிசோட்களை தொடும் முதல் தமிழ் மெகா சீரியலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த சீரியலில் சந்திராவாக நடிக்கவும் நடிகை ஸ்வேதா பண்டேகர் மற்றும் இவரது கணவராக நடிக்கும் ஜெய் தனுஷ் தங்கள் சீரியல் புதிய சாதனை படைக்க போவதை நினைத்து உற்சாகமாக இருக்கின்றனர்.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்வேதா பண்டேகர் தனது சமீபத்திய போஸ்ட்டில், "2000 எபிசோட்களை தொடும் தொடும் முதல் தமிழ் மெகா சீரியல் சந்திரலேகா"என்று கேப்ஷன் கொடுத்து வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் மெகாஹிட் திரைப்படமான "சார்பட்டா பரம்பரை"-யில் இடம்பெற்றுள்ள வம்புல தும்புல மாட்டிக்காத பாடலில் வரும் "மச்ச கல்லு மூக்குத்தி, மஞ்ச தண்ணி ஆரத்தி.. மச்சான் இப்ப மாப்புள பொண்ணு புளியந்தோப்புல" வரிகளுக்கு ஸ்வேதா பண்டேகர், நடிகர் ஜெய் தனுஷுடன் உற்சாகமாக டான்ஸ் ஆடி இருக்கிறார். 
View this post on Instagram

 

A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)

Also read...  ’வனிதா’ கதாப்பாத்திரத்தில் அம்பிகா - ’அன்பே வா’ சீரியலில் புது டிவிஸ்ட்!

சில வாரங்களில் 2,000 எபிசோட்களை கடக்க போகும் சந்திரலேகா சீரியல் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த சாதனை குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இன்டநெட்டிடையே நடிகர் ஜெய் தனுஷ் தனது இன்ஸ்டாவில் விரைவில் 2000 எபிசோட்களை தொட இருக்கிறோம். 2000 எபிசோடுகளில் முத்திரை பதித்த முதல் தமிழ் தொலைக்காட்சி சீரியல் என்று சந்திரேலாக படைக்க உள்ள சாதனையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: