ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

8 வருட பயணம்.. முடிவுக்கு வருகிறது சன் டிவி சந்திரலேகா சீரியல்!

8 வருட பயணம்.. முடிவுக்கு வருகிறது சன் டிவி சந்திரலேகா சீரியல்!

சந்திரலேகா

சந்திரலேகா

சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஒன்றாக சேர்ந்து குரூப் ஃபோட்டோ எடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  8 வருடமாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல்  விரைவில் முடியவுள்ளது. இதுக் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

  உலக தமிழர்களின் அபிமான சேனலாக இருந்து வரும் சன் டிவி , சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பியுள்ளது .அந்த வகையில் சன் டிவி-யில் கடந்த 8 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் "சந்திரலேகா". இந்த சீரியல் கடந்த 2014-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத மிகப்பெரிய சாதனையை சந்திரலேகா சீரியல் செய்துள்ளது.

  அவர்கள் விட்ட எந்த சாபமும் பலிக்கவில்லை.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் விஜய் டிவி நவீன்!

  தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக எபிசோடு களை கடந்த சீரியல் என்ற பெயரை பெற்றுள்ளது சந்திரலேகா தொடர். தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோட்கள் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்ற சந்திரலேகா சீரியல், கிட்டத்தட்ட 2000 எபிசோட்களை கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

  விஜய் சேதுபதி மனைவியாக நடித்தவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு?

  இவருக்கு ஜோடியாக இதற்கு முன்பு சபரி என்ற ரோலில் வாணி ராணி புகழ் அருண் நடித்து வந்தார். பின்பு பல காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலக இப்போது சபரி ரோலில் அஸ்வின் நடித்து வருகிறார்.ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த நெடுந்தொடர் கூடிய விரைவில் முடிய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  சீரியலின்  கடைசி  நாள் ஷூட்டிங் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இதில் சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஒன்றாக சேர்ந்து குரூ ப் ஃபோட்டோ எடுத்துள்ளனர். ஓரிரு வாரத்தில் சீரியலுக்கு என்ட் கார்டு போடப்படும் என தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial