Home /News /entertainment /

வள்ளி திருமணம் சீரியலில் இணையவுள்ள பிரபல நடிகை!

வள்ளி திருமணம் சீரியலில் இணையவுள்ள பிரபல நடிகை!

சந்திரலேகா

சந்திரலேகா

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல 'வள்ளி திருமணம்' தொடரில் தான் இவர் பூமிகா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    சன் டிவியில் ஏராளமான தொடர்கள் இன்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அவற்றில் பல மக்களின் விருப்பமான தொடர்களாக உள்ளது. இந்த தொடர்கள் தொடங்கிய சில நாட்களிலேயே மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டன. அதே போன்று மக்களுக்கு பிடித்த சில தொடர்களை இரண்டாம் பாகமாக கூட எடுத்துள்ளனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களை போன்றே பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான சில தொடர்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அந்த வகையில் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிய தொடர் தான் 'சந்திரலேகா' சீரியல்.

    இந்த சீரியலுக்கு ஏராளமான இல்லத்தரசிகள் ரசிகர்களாக இருந்தனர். தினம்தோறும் இந்த சீரியலை தவறாமல் பார்த்து வந்தனர். இந்த தொடரில் சந்திரா மற்றும் லேகா ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களை மையமாக கொண்டு தான் கதைகளம் அமைந்திருந்தது. இதில் வரும் சந்திரா கேரக்டர் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இவர் துணிச்சலான பெண்ணாக இந்த தொடர் முழுக்க நடித்திருப்பார். இவரின் நடிப்பு திறனுக்காகவே பலர் இந்த சீரியலை பார்த்து வந்தனர்.

    இதையும் படிங்க.. அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய குக் வித் கோமாளி செஃப் தாமு! வைரல் வீடியோ

    அந்த தொடருக்கு பிறகு அவர் வேறு எந்த பெரிய தொடர்களிலும் நடித்து வந்ததில்லை. சந்திரா என்கிற கேரக்டரில் நடித்து வந்த இவரின் நிஜ பெயர் ஸ்வேதா பாண்டேகர் என்பதாகும். இவர் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்துள்ளார். ஆழ்வார், இதயம் திரையரங்கம், வள்ளுவன் வாசுகி போன்ற திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் சில ஆண்டுகள் நடிப்பு துறையில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நிலையில், தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க உள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)






    கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல 'வள்ளி திருமணம்' தொடரில் தான் இவர் பூமிகா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவரின் அறிமுகத்தால் இந்த தொடர் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே பிரபலமாகி இருந்த இந்த சீரியல், தற்போது மேலும் பிரபலமாக போகிறது. கார்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொறுப்பாளராக வள்ளியை மாற்ற வசுந்திரா முடிவு செய்தாலும், கார்த்தி இந்த முடிவை ஏற்கவில்லை. பின்னர், கார்த்தி தனது கல்லூரி தோழி பூமிகாவை விழாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளார். மேலும் வள்ளியை பொறாமைப்பட வைத்து வீட்டை விட்டு துரத்துவதற்காக பூமிகாவுடன் நெருக்கமாக இருப்பது போல் நடிக்கிறார்.

    இதையும் படிங்க.. 12 – 14 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

    இதற்கிடையில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக மோதிரத்தை வழங்க வள்ளி திட்டமிட்டுள்ளார். வள்ளியின் நல்ல எண்ணத்தை கார்த்தியின் திட்டம் வெற்றியடையுமா அல்லது கார்த்திக்கின் பிறந்தநாளில் வள்ளி மோதிரம் போடுவது வெற்றிபெறமா? என்பது தான் தற்போது முக்கிய கதையாக உள்ளது. கார்த்திக்கின் பிறந்தநாளின் எபிசோட் வருகின்ற மார்ச் 20, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பப்படும் என்று அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் வரப்போகும் மற்ற திருப்பங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Sun TV, TV Serial

    அடுத்த செய்தி