வள்ளி சீரியலின் சாதனையை 2 ஆண்டுகளுக்குள் முறியடித்த சந்திரலேகா - ரசிகர்கள் உற்சாகம்!

சந்திரலேகா

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை ஆறரை வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்னும் 2 மாதங்களில் 7-ம் ஆண்டில் ஆதி எடுத்து வைக்க போகிறது.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்களை கவரும் முயற்சியில் பல பிரபல டிவி சேனல்கள் ஈடுபட்டுள்ளன. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என வரிசை கட்டி பலவற்றை ஒளிபரப்பி ரசிகர்களை தங்கள் சேனல்களை ஆர்வமுடன் பார்க்க வைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. எத்தனை வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவருவது என்னவோ திங்கள் முதல் சனி வரை பெருமபாலான சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான்.

எனவே முன்னணி சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை காலை முதல் இரவு வரை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் உலக தமிழர்களின் அபிமான தமிழ் டிவி சேனலாக திகழும் சன் டிவி , தற்போது வரை சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை துவங்கி தெய்வமகள், ரோஜா உள்ளிட்ட எண்ணற்ற சீரியல்கள் மூலம் ரசிகர்களை மகிழ செய்து வருகிறது சன் டிவி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில் தற்போது திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் சந்திரலேகா. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை ஆறரை வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்னும் 2 மாதங்களில் 7-ம் ஆண்டில் ஆதி எடுத்து வைக்க போகிறது.

இந்த சீரியல் 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க போவதற்கு முன்பே மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி அதிக எபிசோட்கள் கடந்த வள்ளி சீரியலை விட அதிக எபிசோட்களை கடந்து சாதனை படைத்துள்ளது சந்திரலேகா சீரியல். 2012, டிசம்பர் 17 முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாக துவங்கிய வள்ளி சீரியல், கடந்த 14 செப்டம்பர் 2019 அன்று 1961 எபிசோட்களில் நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் இன்று 1962 எபிசோடை வெற்றிகரமாக கடந்து வள்ளி சீரியலின் சாதனையை முறியடித்துள்ளது.

Also read... இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியானது - முதல் 5 இடங்களை பிடித்த முக்கிய சீரியல்!

இதன் மூலம் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் அதிக எபிசோட்களை கடந்த வெற்றிகரமான சீரியல்களின் பட்டியலில் வள்ளி சீரியலை பின்னுக்கு தள்ளி சந்திரலேகா சீரியல் வெற்றிகரமாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை சந்திரலேகா சீரியல் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கொண்டாடி வருகின்றனர். சீரியல் தயாரிப்பு நிர்வாகம், நடிகர்கள் மற்றும் பிற குழுவினர் இதனால் உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே இன்று காலை வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரலேகா சீரியலில் சபரி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அருண்குமார் ராஜன், இன்னும் ஒரே மாதத்தில் 2,000 எபிசோட்களை கடந்த தமிழ் சீரியலாக சந்திரலேகா மாபெரும் சாதனை படைக்கும் என்று உற்சாகம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: