சந்திரலேகா சீரியலில் சபரி ரோலில் நடித்த சீரியல் நடிகர் அருண் ராஜன் அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதை பற்றி அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் அருண் ராஜன். அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு, இளவரசி, அழகி போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். இவரது சின்னத்திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய சீரியல் ராதிகாவுடன் இணைந்து நடித்த
வாணி ராணி சீரியல் தான். இந்த சீரியலில் சூரிய நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் தெரிந்த பிரபல சின்னத்திரை நடிகராக பார்வையாளர்களை நடிகர் அருண் ராஜன் கவர்ந்தார்.
இதையும் படிங்க.. ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் கலர்ஸ் அம்மன் 3 சீரியல் நடிகை.. என்ன காரணம்?
பூவே உனக்காக சீரியலில் செல்வம் மற்றும் சந்திரலேகாவில் சபரிநாதன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதில் சந்திரலேகா சீரியலை பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். உலக தமிழர்களின் அபிமான தமிழ் டிவி சேனலாக திகழும் சன் டிவி , தற்போது வரை சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை துவங்கி தெய்வமகள்
, ரோஜா உள்ளிட்ட எண்ணற்ற சீரியல்கள் மூலம் ரசிகர்களை மகிழ செய்து வருகிறது சன் டிவி..
இதையும் படிங்க.. ஏப்ரல் 4 முதல் ரூல்ஸ் மாறுது.. பஞ்சாப் நேஷனல் வங்கி சொன்ன அதிர்ச்சி தகவல்!
அந்த வகையில் சன் டிவியில் மதியம் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் சந்திரலேகா. கடந்த 2014-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இருந்து அருண் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுக் குறித்த தகவலை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தில் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லை இத்தனை ஆண்டுகளாக சபரி ரோலுக்கு வரவேர்பு தந்தது ரசிகர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார். இனிமேல் சந்திரலேகா சீரியலின் சபரி ரோலில் அஸ்வின் குமார் நடிக்க போவதையும் அருண் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினை பல சன் டிவி சீரியல்களில் பார்த்து இருப்பீர்கள். சித்தி 2வில் தற்போது நடித்து வருகிறார். இவர் தான் இனிமேல் சபரி ரோலில் நடிக்க போகிறார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். ஜெய் பீம் படத்தின் சர்ச்சை விஷயத்தில் அருண் ராஜன் சூர்யாவுக்கு ஆதரவாக பேசி இருந்த வீடியோ இணையத்தில் மிகப் பெரிய வைரலானது. அவருக்கு அதன் பின்பு ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாவில் குவிந்தனர். இந்நிலையில் ஏன் சபரி ரோலை விட்டு அருண் விலகிவிட்டார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.