Home /News /entertainment /

நடிகருடன் காதல்..38 வயதில் திருமணம்.. இப்ப அடுத்த குட் நியூஸ் சொன்ன சின்னத்திரை நடிகை!

நடிகருடன் காதல்..38 வயதில் திருமணம்.. இப்ப அடுத்த குட் நியூஸ் சொன்ன சின்னத்திரை நடிகை!

சந்திரா லட்சுமணன்

சந்திரா லட்சுமணன்

சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரபல சீரியல் நடிகையான சந்திரா லட்சுமணன் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

    தமிழில் ’மனசெல்லாம்’ படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் சந்திரா. பின்னர் ’ஏப்ரல் மாதத்தில்’, தில்லாலங்கடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சந்திரா.இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    சந்திரா, 20க்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் ’கோலங்கள்’  ’மகள்’, ’சொந்தபந்தம்’, ’பாசமலர்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு நீண்ட நாள் காதலித்து வந்த டோஷ் கிறிஸ்டி என்பவரை 38 வயதில் திருமணம் செய்துக் கொண்டார்.




    டோஷ் மலையாள சீரியலான ‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் சந்திரா உடன் இணைந்து நடித்து வந்தார். ரீல் ஜோடிகளான இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினர். இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இருவரும் ஜூனியருக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.




    ரெட் கலர் பட்டு புடவையில் சிம்பிளாக நடந்த வளைக்காப்பு புகைப்படத்தையுடன் ரசிகர்களிடம்  இந்த செய்தியை சந்திரா பகிர்ந்துள்ளார். அவருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி