விஜய் டிவி, ஜீ தமிழ்... இப்போ சன் டிவி சீரியலில் சைத்ரா ரெட்டி!

சைத்ரா ரெட்டி

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமான சைத்ரா, தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார்.

 • Share this:
  சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் கயல் தொடரில் ஹீரோயினாக நடிகை சைத்ரா ரெட்டி நடிக்கவிருக்கிறார்.

  குளிர் 100 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த சஞ்சீவ், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதில் உடன் நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அய்லா என்ற மகளும் இருக்கிறார். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே விஜய் டிவி-யில் ‘காற்றின் மொழி’ என்ற சீரியலில் நடித்து வந்தார் சஞ்சீவ். அந்த சீரியல் 331 எபிசோடுகள் ஓடிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதனால் சற்று ஓய்வில் இருந்த சஞ்சீவ், தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் ஒளிபரப்பு இன்னும் தொடங்கவில்லை.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  இந்நிலையில் கயல் சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக, சைத்ரா ரெட்டி நடிக்கவிருக்கிறார். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமான சைத்ரா, தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார். தற்போது சன் டிவி-யின் கயல் தொடரில் நடிக்கவிருக்கிறார்.  அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கின்றன. அதோடு சைத்ராவுக்கு சமீபத்தில் திருமணமானது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: