’காருக்குள் சர்ப்ரைஸ்’ கொண்டாட்டம் - சின்னத்திரை பிரபலங்களின் அட்ராசிட்டி!

நக்‌ஷத்ரா பிறந்தநாள்

ஸ்ரீநிதி சுதர்ஷனும், நக்‌ஷத்திராவின் பிறந்நாள் கொண்டாட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  சின்னத்திரை நடிகையான நக்‌ஷத்திராவின் பிறந்தநாளை, அவருடைய சக நண்பர்கள் சென்னையில் நடு இரவில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

  யாரடி நீ மோகினி சீரியலில் ஹீரோயினாக நடித்த நக்சத்திராவுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி பிறந்தநாள். இதனை முன்பே தெரிந்து வைத்திருந்த அவருடைய தோழிகளான நடிகைகள் சைத்திரா ரெட்டி மற்றும் ஸ்ரீநிதி சுதர்சன், ரேஷ்மா முரளிதரன் உள்ளிட்டோர் நட்சத்திராவுக்கு சர்பிரைஸ் கொடுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி, செப்டம்பர் 12-ஆம் தேதி இரவு காரில் சென்னையை ரவுண்ட் அடித்த அவர்கள், மெரீனா பீச் அருகில் காரிலேயே நட்சத்திராவுக்கான பிறந்தநாள் கேக்கை வெட்டியுள்ளனர்.

  காரின் பின்புறத்தில் ’ஹேப்பி பர்த்டே’என எழுதி விதவிதமான கேக்குகளையும் வாங்கி ரெடியாக வைத்துள்ளனர். அவர்களுடனேயே காரில் சுற்றினாலும், நட்சத்திராவுக்கு இது தெரியவில்லை. சர்பிரைஸாக நள்ளிரவு 12 மணிக்கு காரில் வைத்திருந்த பிறந்தநாள் கேக்கை காண்பிக்கவும், நட்சத்திரா மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். உடனே ஸ்ரீநிதி சுதர்சன், ஷாபனா, ரேஷ்மாவை மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து கட்டியணைத்துக் கொண்டார்.

  பின்னர், கேக்கை வெட்டி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியாக கொண்டாடியதாக தெரிவித்துள்ள அவர், தன் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் கொடுப்பார்கள் என நினைக்கவே இல்லையாம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்போதும்போல் ஒரு ரவுண்ட் செல்வோம் என்ற நினைப்பிலேயே காரில் ரவுண்ட் அடித்துள்ளார். நள்ளிரவு 12 மணி ஆன பிறகே அவர்களின் சர்பிரைஸ் எனக்கு தெரிய வந்தது என கூறியுள்ளார்.

  நக்ஷத்திராவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை சைத்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஷாபனா, மதன் பாண்டியன், ஸ்ரீநிதி, ரேஷ்மா முரளிதரன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த பிறந்தநாள் உனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கட்டும் செல்லமே என சைத்திரா வாழ்த்தியுள்ளார். கடவுள் ஆசிர்வாதத்தோடு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இந்த ஆண்டு உனக்கு வெற்றி நடைபோடும் வருடமாக இருக்கட்டும் என மனதார நட்சத்திராவுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Chaitra Reddy, Reshma Muralidharan and Shabana birthday surprise to actress Nakshathra, nakshathra zee tamil, nakshatra, yaradi nee mohini nakshatra instagram, yaradi nee mohini nakshatra birthday, yaaradi nee mohini nakshatra age, yaaradi nee mohini nakshatra, yaaradi nee mohini nakshatra wiki, yaaradi nee mohini nakshatra instagram id, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா, யாரடி நீ மோகினி, யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா, யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா இன்ஸ்டாகிராம்
  நக்‌ஷத்ரா பிறந்தநாள்


  இதேபோல், ஸ்ரீநிதி சுதர்ஷனும், நக்ஷத்திராவின் பிறந்நாள் கொண்டாட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களைத் தவிர நட்சத்திராவின் மீடியா மற்றும் சின்னத்திரை நண்பர்களான ஆர்.ஜே விஜய், நியாஸ் கான், காவ்யா கௌவுடா, பரத், ஸ்ரீ ரஞ்சனி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
  நட்சத்திரா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வெற்றித் தொடராக வலம் வந்து, அண்மையில் நிறைவடைந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான யாரடி நீ மோகினி 1200 எபிசோடுகளைக் கடந்தது. அமானுஷ்ய சக்தியை பின்புலமாக கொண்டிருந்ததால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், திடீரென இந்த சீரியல் அண்மையில் முடிவுக்கு வந்தது ரசிகர்களிடையே ஏமாற்றமாக அமைந்தது. இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனையடுத்து, திருமதி ஹிட்லர் சீரியலிலும் நட்சத்திரா நடித்து வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: