Home /News /entertainment /

அந்த ஒரு விஷயத்துக்காக கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி மீது பொறாமை படும் ரசிகர்கள்!

அந்த ஒரு விஷயத்துக்காக கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி மீது பொறாமை படும் ரசிகர்கள்!

சைத்ரா ரெட்டி

சைத்ரா ரெட்டி

யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த கையோடு சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

  வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் ஒருபக்கம் பெருகி கொண்டே செல்கிறது. ரசிகர்கள் அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களை தொடர்வது, அவர்கள் குறித்த அப்பேட்டுகளை வைரலாக்குவது என சின்னத்திரை நடிகைகள் பலரும் பயங்கர ரீச்சில் இருக்கின்றனர். அதில் டாப் லிஸ்டில் இருப்பவர்கள் சன் டிவி, விஜய் டிவி சீரியல் நடிகைகள். அந்த வகையில் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி பற்றி கட்டாயம் பேச வேண்டும். இப்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியல் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் கயலாகவே வாழ்கிறார் சைத்ரா. வீட்டை தாங்கி பிடிக்கும் மிடில் கிளாஸ் பெண்ணின் ரோலில் சைத்ரா நடித்து வருவது தாய்மார்கள் மனதில் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.

  தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வரும் நடிகை சைத்ரா ரெட்டி தர்ஷன் கே ராஜுவுடன் கன்னட டிவி சீரியலான“அவனு மேட்டே ஷ்ரவாணி” மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.பின்னர் தான் யாரடி நீ மோகினி சீரியல் வாய்ப்பை பெற்றார். இதில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.சில மாதங்களுக்கு முன்னர் யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த கையோடு சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

  இதையும் படிங்க.. சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!

  இந்த சமயத்தில் தான் அஜித்தின் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அப்போது தான் பலருக்கும் தெரிய வந்தது வலிமையில் சத்ரா ரெட்டி இருக்கிறார் என்று. பலரும் இதைப்பற்றியும் அவரிடம் கேட்டு இருந்தனர். படம் வெளியான பின்பு இதை பற்றி பேசுகிறேன் என்றார், கடந்த மாத வலிமை ரிலீஸானது. சைத்ரா ரெட்டி கெஸ்ட் ரோலில் இருப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சைபர் கிரம் போலீஸாக கிட்டத்தட்ட படம் முழவதும் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். அதிலும் குறிப்பாக இவர் அஜித் இடம்பெறும் சீன்களின் மட்டுமே அதிகம் இருப்பார். இதைப்பார்த்து சைத்ரா ரெட்டி ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

  படம் ரிலீஸான மறுநாள், அவரின் இன்ஸ்டா பக்கத்தில் படத்தில் இடம்பெற்று ஒரு முக்கியமான காட்சியை பற்றி கேட்டு சைத்ராவை நெகிழ வைத்தனர். இந்நிலையில் அஜித்துடன் சைத்ரா ரெட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லை வளர்ந்து வரும் பல சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கும் அஜித்தை நேரில் பார்க்க வேண்டும், அவருடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும். அவருடன் ஒரு சீனிலாவது வர வேண்டு என ஆசை இருக்கும்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  ஆனால் சைத்ரா ரெட்டிக்கு குறுகிய காலத்திலே இவை அனைத்தும் சாத்தியமாகி விட்டது. அதனால் சைத்ராவை பார்த்து பொறாமையாக இருப்பதாக ரசிகர்கள் அந்த புகைப்படத்தின் கீழ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். லக் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது கடினமான உழைப்பின் மூலம் தான் சைத்ரா இந்த இடத்தை அடைந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான பலரும் கூறுகின்றனர்.

  இதையும் படிங்க.. சுயநலவாதியாக தனத்தை மாற்றும் அம்மா.. கோபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி!

  இந்த புகைப்படத்தை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஒரு முக்கியமான விஷயத்தையும் ரசிகர்களுக்கு கூறி இருக்கிறார் அதாவது இந்த புகைப்படம் வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் சைத்ராவின் கடைசி நாள் ஷூட்டிங் அன்று எடுக்கப்பட்டதாம். இந்த புகைப்படத்தை எடுத்தவர் அஜித்தின் மேக் அப் மேன். அவருடைய ஃபோனில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இப்போது தான் சைத்ராவின் கைக்கு கிடைத்து இருக்கிறது. அதை பல முயற்சிகள் எடுத்து சைத்ராவின் ஹேர்ஸ்டைலிஸ்ட் மகேஷ் என்பவர் அவருக்கு தேடி கண்டுப்பிடித்து அனுப்பி இருக்கிறார். இந்த தகவல்களை பயங்கர சந்தோஷத்துடன் சைத்ரா இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Valimai, Zee tamil

  அடுத்த செய்தி