• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கயல் சீரியல் ஹீரோயினுக்கு நடந்த விபத்து... பதறிய ரசிகர்கள்

கயல் சீரியல் ஹீரோயினுக்கு நடந்த விபத்து... பதறிய ரசிகர்கள்

சைத்ரா ரெட்டி

சைத்ரா ரெட்டி

ஷூட்டிங்கின் போது தனது வெஸ்பா ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார் சைத்ரா.

  • Share this:
    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை ப்ரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஈர்த்து TRP ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளன. இதனிடையே கடந்த மாத இறுதியில் சன் டிவி-யில் புதிதாக துவங்கிய சீரியல் கயல். கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன் குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்து கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

    கயல் மற்றும் அவளுடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றி மற்றும் அவரை காதலிக்கும் எழிலை சுற்றியும் கதை நகர்கிறது. இந்த சீரியலில் ஹீரோயின் கயலாக பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். ஹீரோ எழிலரசன் ரோலை குளிர் 100 திரைப்படத்தில் நடித்த சஞ்சீவ் ஏற்று நடித்து வருகிறார். இவர் விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீசன் 1 மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்து பின்னர் தனக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசாவையே காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

    மேலும் கயல் சீரியலில் நடிகை காயத்ரி ஜெயராமன், முரளி, மீனாகுமாரி, அன்புவாக அவினாஷ் அசோக், மூர்த்தியாக அய்யப்பன், ஆனந்தியாக அபி நவ்யா, ஜானகி தேவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரபல நடிகை சைத்ரா ரெட்டி சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் ஆவார். முதன் முதலாக கன்னட சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் இவர். பின்னர் பிரியா பவானி சங்கர் விலகியதால் தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    பின்னர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடி ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்த யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார். இந்த சீரியலில் இவரது நடிப்பால் கவரப்பட்ட மக்களால் இவரது ரசிகர் வட்டம் பெருகியது. சோஷியல் மீடியாவிலும் இவருக்கு ஃபாலோயர்ஸ் பெருகினர். இந்நிலையில் தான் தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி.

    Chaitra Reddy got injured during Kayal shooting, kayal serial, kayal serial cast, kayal serial today episode, kayal serial wiki, kayal serial today episode in tamil, kayal serial in sun tv, kayal serial actress name, kayal serial episode, kayal serial (sun tv wikipedia), kayal serial cast and crew, chaitra reddy kayal, chaitra reddy instagram, chaitra reddy marriage photos, chaitra reddy images, kayal sun tv serial, கயல் சீரியல், கயல் சீரியல் நடிகர்கள், கயல் சீரியல் இன்று, கயல் சைத்ரா ரெட்டி, நடிகை சைத்ரா, சீரியல் நடிகை சைத்ரா, சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராம்
    சைத்ரா ரெட்டி போஸ்ட்


    இதனிடையே கயல் ஷூட்டிங்கின் போது தனது வெஸ்பா ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார் சைத்ரா ரெட்டி. இதனை தொடர்ந்து ரசிகர்கள் என பல தரப்பினர் அவரை நலம் விசாரித்து உள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு இன்ஸ்டா ஸ்டோரியில், விபத்து நடந்து 3 நாட்கள் ஆகிறது. இப்போது பரவாயில்லை. என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: