பிக் பாஸ் 5-ன் பெண் பிரபலம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் போட்டியாளர்கள் பெற்ற குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட, பாவனி, பிரியங்கா, ராஜு, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள். நேற்று ஒளிபரப்பப்பட்ட இதன் இறுதிப் போட்டியில் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர். இதையடுத்து நான்காவது இடத்தை அமீரும், ஐந்தாம் இடத்தை நிரூப்பும் பிடித்தனர்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 5-ன் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பதற்றம் வேண்டாம், அவர் தமிழ் பிரபலம் அல்ல, தெலுங்கு பிக் பாஸ் பிரபலம். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே தெலுங்கிலும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அங்கும் 5 சீசன்கள் முடிந்திருக்கிறது.
ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு
நடந்து முடிந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் சரயு ராய். உள்ளே போன வேகத்தில் முதல் ஆளாக எலிமினேட்டும் ஆனார். தற்போது அவர் தான் கைதாகியிருக்கிறார். அதற்குக் காரணம் ஒரு சர்ச்சை விளம்பர வீடியோ தான். அந்த வீடியோவில் போதையில் இருக்கும் சிலர் விநாயகரை புகழ்ந்து கோஷம் எழுப்புவது போல காட்டப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!
அது இந்துக்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், நடிகை சரயு ராய் மீது போலீசில் புகார் அளித்தனர். இது பற்றிய விசாரணைக்காக ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.