Home /News /entertainment /

வெற்றிக்கு கொடுக்கும் மரியாதை.. அலுவலகத்தின் வாசலை முத்தமிட்ட பிரபல நடிகர்!

வெற்றிக்கு கொடுக்கும் மரியாதை.. அலுவலகத்தின் வாசலை முத்தமிட்ட பிரபல நடிகர்!

போஸ் வெங்கட்

போஸ் வெங்கட்

முதல் நாள் அலுவலகத்தில் வெற்றிக்கு கொடுக்கும் மரியாதையாக அலுவலகத்தின் வாசலுக்கு முத்தமிட்டுள்ளார் போஸ் வெங்கட்

    சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு நின்று அதில் வெற்றி பெற்ற பிரபல நடிகர் போஸ்ட் வெங்கட் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

    மெட்டி ஓலி சீரியல் போஸ் என்றால் சின்னத்திரை ரசிகர்கள் உடனே அடையாளம் கண்டுக்கொள்வார்கள்.,அந்த அளவுக்கு நடிகர் வெங்கட்-க்கு போஸ் என்ற ரோல் மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது. அதன் பின்பு தனது பெயருடன் போஸ் என்பதை அடைமொழியாகவே சேர்ந்து கொண்டார் வெங்கட். இவரின் மனைவி சோனியா போஸ் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பல படங்களில் நடித்தவர், தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

    ரோஜா மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. என்ன காரணம் தெரியுமா?

    அதே போல் போஸ் வெங்கட் பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடம், அண்ணன், போலீஸ் ஆஃபீசர் கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார்.  சமீபத்தில் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ படத்திலும் அண்ணனாக நடித்து இருந்தார். அதுமட்டுமில்லை இவர் இயக்கத்தில் வெளியான ‘கன்னி மாடம்’ திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று இருந்தது. இந்நிலையில் போஸ் வெங்கட் சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டார். வசந்தம் அணி சார்பாக போஸ் வெங்கட் பொதுச்செயலாளர் பதவியில் நின்று அதில் வெற்றியும் பெற்றார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Bose Venkat (@official.bosevenkat)






    இவருக்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்பு முதல்  செயற்குழு கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அந்த கூட்டத்திற்கு சென்ற போஸ் வெங்கட், முதல் நாள் அலுவலகத்தில் வெற்றிக்கு கொடுக்கும் மரியாதையாக அலுவலகத்தின் வாசலுக்கு முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Bose Venkat (@official.bosevenkat)






    இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதுமட்டுமில்லை வசந்தம் அணியுடன் முதல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் போஸ் வெங்கட் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இதில் மெட்டி ஒலி ரவி, ஆனந்தம் ரமணா, ஈஸ்வர் என பல சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி