ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெண்பாவின் தற்கொலை முயற்சி.. பாரதி கண்ணம்மா தொடர் முடிய போகிறதா?

வெண்பாவின் தற்கொலை முயற்சி.. பாரதி கண்ணம்மா தொடர் முடிய போகிறதா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா எபிசோடில் வெண்பா விஷத்தை குடித்து தற்கொலை முயற்சி செய்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாரதி கண்ணம்மா தொடரின் பரபரப்பான இன்றைய புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் வெண்பாவின் தற்கொலை முயற்சி காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

  இந்த வருடத்திற்குள் பாரதி கண்ணம்மா சீரியலை முடித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கின்றனர் ரசிகர்கள். இந்த வருடத்திற்குள் இந்த சீரியலை முடித்துவிட்டு புது வருடம் புது சீரியலுடன் தொடங்குங்கள் என ரசிகர்கள் கெஞ்சாத குறை தான். கண்ணம்மாவுடன் சேருவதும், மறுபடியும் சண்டை போட்டு அனுப்பி விடுவதும் என பாரதியின் சீரியஸ் கோபம் குறைந்த பாடில்லை. இதற்கு இடையில் தீவிரவாதிகளின் பிடியில் மாட்டிக் கொண்டு 2 வாரம் ஆஸ்பிட்டலில் இருந்தனர் பாரதியும் கண்ணம்மாவும். இவர்களுடன் ஹேமா, லட்சுமி, அகிலன், அஞ்சலி என அனைவரும் மாட்டிக்கொண்டனர்.

  கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த வரும் ராமமூர்த்தி.. கண்ணீரில் பாக்கியா!

  பாரதியின் உயிரை கடைசிவரை கூடவே இருந்து காப்பாற்றினார் கண்ணம்மா. இதனால் அவருக்கு கண்ணம்மா மேல் சிம்பதித்தி வந்ததே தவிர கோபம் குறைந்து கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ளவதாக இல்லை. எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என சவுந்தர்யா நினைக்கிறார். அதற்கான முயற்சிகளையும் எடுக்கிறார். ஆனால் அதற்குள் மீண்டும் ஆட்டத்தை தொடங்குகிறார் வெண்பா. மறுபடியும் பாரதியை ஏமாற்ற தற்கொலை முயற்சியை கையில் எடுக்கிறார்.

  ' isDesktop="true" id="810704" youtubeid="YmBSNvjmf0E" category="television">

  நேற்றைய எபிசோடில் தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அப்பாவாக பாரதியை இருக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார் . இதனால் டென்ஷன் ஆன பாரதி, இதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். எல்லோர் முன்பும் வேண்டாம் ,ரகசியமாக கழுத்தில் தாலி கட்டினால் மட்டும் போதும், இந்த சமூகத்தில் எனக்கு அந்தஸ்த்து கிடைக்கும் என்கிறார் வெண்பா. ஆனாலும் பாரதி மனசு மாறுவதாக இல்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  காதல் கணவர் சித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் பரிசா.. கலக்கிய ஸ்ரேயா அஞ்சன்!

  இதில் வெண்பா விஷத்தை குடித்து தற்கொலை முயற்சி செய்கிறார். அதை வீடியோவாக எடுத்து பாரதிக்கும் அனுப்புகிறார். பதறி அடித்துக் கொண்டு வெண்பா வீட்டுக்கு வரும் பாரதி, வெண்பாவை காப்பாற்ற  அவரை ஆஸ்பிட்டல் தூக்கி செல்கிறார். இந்த பரபரப்பு புரமோவை பார்த்த ரசிகர்கள் இதோடு சீரியல் இனிதே முடிவடைந்தால் நல்லது என கமெண்ட் செய்து வருகின்றனர். இனியாவது வெண்பா திருந்தினால் ஓகே, அது இல்லாமல் ஓவர் பாசத்தில் வெண்பாவுக்கு பாரதி தாலி கட்டினால் இன்னும் 2 வருடத்திற்கு பாரதி கண்ணம்மா எபிசோடுகள்  கன்ஃபார்ம். என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv