பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் மீண்டும் பாரதியை தேடி வருகிறார் வெண்பா.
இத்தனை மாதமாக பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் தான் சண்டைக்கு மேல் சண்டை வந்து கொண்டிருந்தது. ஆனால் வெண்பாவின் அம்மா ரேகாவின் என்ட்ரிக்கு பிற மொத்த கதையையும் மாறிவிட்டது. வெண்பாவின் அம்மா ஷர்மிளா, பாரதியிடம் போய் கல்யாணத்தை பற்றி பேச, அதனால் பொறுமையை இழந்த பாரதி, வெண்பாவை கூப்பிட்டு பேசுகிறர். கடைசியில் கண்னம்மாவை நான் விவாகரத்து செய்தாலும் இனிமேல் எந்த ஜென்மத்திலும் உன்னை கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என ஒரே போடு போடுகிறார். இதனால் அதிர்ச்சியான வெண்பா கோபத்துடன் வீடு திரும்பினார்.
பார்வதி கல்யாணத்தை கெடுக்க நினைத்த விக்கி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய சரவணன்!
அதன் பின்பு பாரதியை வெண்பா சந்திக்கவே இல்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாரதிக்கு மனித நேயம் விருது வழங்க, அந்த விழாவுக்கு கண்ணம்மா, லட்சுமி என பாரதியின் மொத்த குடும்பமும் சென்றனர். ஆனால் வெண்பவை பாரதி அழைக்கவில்லை. அதுமட்டுமில்லை இந்த விஷயம் பற்றி கூட வெண்பாவுக்கு தெரியாது. ஆனால் இந்த விஷயம் அவரின் அம்மா ஷர்மிளாவுக்கு தெரிய,. அவர் வெண்பாவிடம் இதை பற்றி சொல்லி, இனிமேல் நான் பாக்குற மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இப்படி இருக்கையில் பாரதிக்கு விருது வழங்கப்பட்ட சந்தோஷத்தை கண்ணம்மா கேசரி செய்து கொண்டாடுகிறார். விஷயம் தெரிந்து வெறியான வெண்பா, அவசர அவசரமக ஒரு பிளான் போடுகிறார். இப்படியே விட்டால் குழந்தைகளை சாக்காக வைத்து பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விடுவர்கள் என நினைத்த வெண்பா, பாரதியை பார்த்து ஒரு விஷயத்தை பற்றி பேச ஆஸ்பிட்டல் கிளம்புகிறார்.
வெற்றியை பிரியும் அபி! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடைசி நேர திருப்பம்!
பாரதி ஆஸ்பிட்டலில் இருக்க, வெண்பா அங்கே போய் பாரதியை பார்த்து பேச முயற்சி செய்கிறார். வெண்பாவை சற்றும் எதிர்பார்க்காத பாரதி அதிர்ச்சியில் மறுபடியும் இவளா? என ஷாக் ஆகுகி்றார். அதுமட்டுமில்லை இந்த முறை பாரதிக்கு வெண்பாவிடம் பேச துளிகூட விருப்பமில்லை. இதனால் வெண்பாவை உள்ளே கூட வா என்று கூறாமல் அவரை பார்த்து முறைக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது. வெண்பா, இந்த முறை ஹேமா பற்றிய உண்மையை பேச தான் பாரதியை பார்க்க வந்திருக்கிறார். இந்த காட்சிகள் அடுத்த வார எபிசோடில் ஒளிப்பரப்பாகும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது உண்மையா? இல்லையா? என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.