முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி

பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல அந்த நகச்சுவை காட்சி இருப்பதாகவும், இதனால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை பகடி செய்திருப்பதாகக் கூறி, அத்தொலைக்காட்சி மன்னிப்பு கோரவேண்டுமென பாஜக வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இருக்கும் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகள் செய்த நகைச்சுவைக் காட்சி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தனர். அதோடு வட மாநிலங்களில் தாங்கள் மாறுவேடத்தில் செல்ல வேண்டும் எனவும், தென்னகத்தில் மன்னராகவே வந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் நசைச்சுவையாக தெரிவித்தனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலானத்தைத் தொடர்ந்து, அந்த நகைச்சுவை காட்சிக்கு பாஜக-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல அந்த நகச்சுவை காட்சி இருப்பதாகவும், இதனால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் மாநில பாஜக ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர். அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை சேனல் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிர பேசு பொருளாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Modi, Zee tamil, Zee Tamil Tv