ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!

பிக் பாஸ் வனிதா

பிக் பாஸ் வனிதா

பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் பங்கேற்ற வனிதா பாதியிலேயே வெளியேறினார். கடந்த வருடம் பொட்டிக் ஷாப் ஒன்றை துவக்கி பிசினஸ் செய்து வரும் வனிதா, இப்போது ஃபேஷன் டிசைனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சில ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளித்திரையில் நடித்தவர்களில், பலர் இன்று சின்னத்திரைக்கு வந்து கலக்கு கலக்கு என்று கலக்கி கொண்டிருக்கிறார்கள். அப்படி கலக்கி வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

  தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, பெற்றோர் மற்றும் சகோதர்களுடனான கருத்து வேறுபாடுகள், முதல் திருமணம் தோல்வியில் முடிந்த காரணத்தால் அடுத்தடுத்த திருமணங்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

  சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

  தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் தான் வனிதா. வனிதாவுக்கு ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய 2 தங்கைகள் உள்ளனர். இவர்களும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளனர். தற்போது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை வனிதா விஜயகுமார். தொடர்ந்து மாணிக்கம் திரைப்படத்தில் நடித்தார். பின் ஹிட்லர் பிரதர்ஸ் என்ற மலையாள படத்திலும், தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

  சண்டையை ஆரம்பித்த ஐஸ்வர்யா - மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடா இது?

  வனிதாவின் கணவர்கள்:

  வனிதா விஜயகுமார் முதலில் 10 செப்டம்பர் 2000-ல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். சில ஆண்டுகளில் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவகாரத்து செய்து விட்டு, பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நிலையில், இடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் பிக்பாஸ் சீசனில் பங்கேற்று மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிறகு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளை கொண்ட பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதியாக  ஒரு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரையும் பிரிந்தார்.


  ஃபேஷன் டிசைனர்:

  பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற பிறகு மீண்டும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிசியாக இருக்கிறார். அனல்காற்று, அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லு இருந்தா போராடு, பிக்கப் ட்ராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் பங்கேற்ற வனிதா பாதியிலேயே வெளியேறினார். கடந்த வருடம் பொட்டிக் ஷாப் ஒன்றை துவக்கி பிசினஸ் செய்து வரும் வனிதா, இப்போது ஃபேஷன் டிசைனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.


  தனது இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள வனிதா ஃபேஷன் டிசைனர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சிகையலங்கார நிபுணராக மிகப்பெரிய ஆடியன்ஸ் முன்னிலையில் எனது முதல் மேடை என்று கூறி தான் மேக்அப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்த அழகியுடன் மேடையில் நடை போட்டுள்ள போட்டோவை ஷேர் செய்து உள்ளார். அற்புதமான வாய்ப்பளித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கைதட்டி பாராட்டிய அனைத்து அன்பு சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vanitha Vijayakumar, Vijay tv